India vs Srilanka | இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்திய அணி

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

  • Share this:
    ஷிகர் தவன் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்த சூழலில், இரண்டாவது ஒரு நாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    Also Read :  பிரிதிவி ஷா இன்னிங்ஸ் குறித்து சேவாகின் ‘மைல்டு டச்’ : குஷியான ரசிகர்கள்

    அதேசமயம் போட்டியில் வென்று இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பதற்கும் இலங்கை வீரர்கள் தயாராகி வருகின்றனர். மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: