• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Rahul Dravid |நாம் சாம்பியன்கள் போல் ஆடினோம்: ராகுல் திராவிடின் உற்சாகப் பேச்சு

Rahul Dravid |நாம் சாம்பியன்கள் போல் ஆடினோம்: ராகுல் திராவிடின் உற்சாகப் பேச்சு

திராவிட், தவான்.

திராவிட், தவான்.

இலங்கை அணி மீண்டு வந்தது ஆனால் நாம் சாம்பியன்கள் போல் ஆடி வெற்றி பெற்றோம் என்று பயிற்சியாளர் ராகுல் திராவிட் தொடரை வென்ற பிறகு அணி வீரர்களிடம் உற்சாகமாகப் பேசியுள்ளார்.

  • Share this:
    இலங்கை அணி மீண்டு வந்தது ஆனால் நாம் சாம்பியன்கள் போல் ஆடி வெற்றி பெற்றோம் என்று பயிற்சியாளர் ராகுல் திராவிட் தொடரை வென்ற பிறகு அணி வீரர்களிடம் உற்சாகமாகப் பேசியுள்ளார்.

    இது குறித்த வீடியோவை பிசிசிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டு அது வைரலானது. போட்டிக்கு முன்பும் பின்பும் பயிற்சியாளர்கள் ‘பெப் டாக்’ எனப்படும் உற்சாகமூட்டும் பேச்சினையும் ஆலோசனையையும் வழங்குவது வழக்கமே. ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு தனிப்பட்ட முறையில் பேசுவார்களே தவிர அணி வீரர்களை ஒட்டுமொத்தமாக அழைத்துப் பேசுவது அரிதானதே. அந்த வகையில் ராகுல் திராவிட் முன்னோடியாகத் திகழ்கிறார்

    தோல்வி அடைந்தால் ஏன் தோல்வி என்பதை பரிசீலிக்க விடுதியில் பயிற்சியாளர் வீரர்களைச் சந்திப்பது வழக்கம், ஆனால் வெற்றி பெற்றால் அப்படிப்பட்ட சந்திப்பு ஜாலி சந்திப்பாகவே அமையும்.

    இந்நிலையில் தீபக் சாகர் சற்றும் எதிர்பாராத ஒரு இன்னிங்ஸில் தன் ஆல்ரவுண்ட் திறமையைக் காட்டி வெற்றிபெறச் செய்தார். கோலியால் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒதுக்கப்பட்ட புவனேஷ்வர் குமார் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுவதோடு, பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்கிறார்.

    இந்நிலையில் ராகுல் திராவிட் அணி வீரர்களைப் பாராட்டிப் பேசியதாவது:

    நாம் எதிரணியை மதிக்க வேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல் இலங்கை அணி மீண்டு வந்துள்ளது. நாம் சாம்பியன்போல் திரும்பி வந்துள்ளோம். வெற்றிக்கான வழியைத் தேடியுள்ளோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இலங்கை அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனால், கடைசிவரை போராட வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

    அது கடைசியில் நடந்து வெற்றியாக அமைந்துவிட்டது. வெற்றி பெறாவிட்டாலும்கூட கடைசிவரை போராடுவது முக்கியம். சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

    இவ்வாறு கூறினார் ராகுல் திராவிட்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: