India vs Sri Lanka: சபாஷ் தீபக் சாகர்! ரசித்த சீனியர் வீரர்கள், வாசிம் ஜாஃபர் மீம்

இலங்கையில் இந்திஅய் வெற்றியை ரசிக்கும் சீனியர் வீரர்கள்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ள இந்திய அணி கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவருகிறது, இருந்த போதிலும் இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டியையும் சீனியர் வீரர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

  • Share this:
    இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ள இந்திய அணி கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவருகிறது, இருந்த போதிலும் இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டியையும் சீனியர் வீரர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

    இங்கிலாந்தில் உள்ள இந்திய டெஸ்ட் அணி ஷிகர் தவான் தலைமை இளம் காளைகளின் வெற்றியை ரசித்த புகைப்படத்தை பிசிசிஐ டிவி வெளியிட்டுள்ளது. முன்னாள் இந்திய டெஸ்ட் வீரரும் ரஞ்சி நட்சத்திரமுமான வாசிம் ஜாஃபர் டீம் இந்தியா வாட்சிங் டீம் இந்தியா என்று மீம் வெளியிட்டு ரசித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Team India (@indiancricketteam)






    நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பந்து வீச்சில் யஜுவேந்திர செகல் 3 விக்கெட்டுகளுடன் தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் எடுக்க இலங்கை அணி 275/9 என்று ஓரளவுக்கு நல்ல இலக்கை நிர்ணயித்தது.



    இந்திய அணி சேசிங்கில் பிரிதிவி ஷா, இஷான் கிஷன் அதிரடி வீரர்களை விரைவில் இழக்க, ஷிகர் தவானும் ஆட்டமிழக்க 65/3 என்று ஆனது, அதன் பிறகு மணீஷ் பாண்டே, சூரிய குமார் யாதவ் 50 ரன்கள் சேர்த்தனர், பாண்டே ரன்னர் முனையில் பவுலர் கைப்பட்டு ரன் அவுட் ஆனார்.

    இதையும் படிங்க: India vs Sri Lanka: இந்த அடி போதுமா?- அசரவைத்த தீபக் சாகர் ஆட்டம்; தொடரை வென்றது ஷிகர் தவான் இளம்படை-புவனேஷ்வர் உறுதுணை

    Also Read: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆக வேண்டும்- தீபக் சாகர் கனவு நிறைவேறியது- படங்கள்

    சூரியகுமார் யாதவ் மிகப்பிரமாதமாக ஆடி ரன் ரேட்டை தொய்ய விடாமல் 55 ரன்களை எடுத்து எல்.பி.ஆனார். ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். இந்தியா 193/7 என்ற நிலையில் தடுமாறிய போது அட்டகாசமாக ஆடிய தீபக் சாகர் (69), புவனேஷ்வர் குமார் (19) போட்டியை வெற்றி பெறச் செய்தனர். தொடரை இந்தியா வென்றது.

    Also Read: India vs Sri Lanka | இலங்கையை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி

    இதனை இந்திய சீனியர் அணி வீரர்கள் நேற்று ரசித்துப் பார்த்தனர்.
    Published by:Muthukumar
    First published: