இலங்கைத் தொடருக்கான டி20 இந்திய அணியில் ஜடேஜா மீண்டும் இணைந்துள்ளார். ரிஷப் பண்ட் இல்லாததால் சஞ்சு சாம்சனுக்கு ஒரு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சாமர்த்தியமாக இதைப் பயன்படுத்தினால் டி20 உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக டிக்கெட், இல்லையெனில் நேராக கேரளாவுக்கு ட்ரெய்ன் டிக்கெட்தான்.
இலங்கைத் தொடருக்கான டி20 இந்திய அணியில் ஜடேஜா மீண்டும் இணைந்துள்ளார். ரிஷப் பண்ட் இல்லாததால் சஞ்சு சாம்சனுக்கு ஒரு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சாமர்த்தியமாக இதைப் பயன்படுத்தினால் டி20 உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக டிக்கெட், இல்லையெனில் நேராக கேரளாவுக்கு ட்ரெய்ன் டிக்கெட்தான்.
அணித்தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறும்போது, “சஞ்சு எங்கள் திட்டத்தில் இருக்கிறார். மிக முக்கியமாக, ஆஸ்திரேலிய விக்கெட்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் கிரிக்கெட் வீரர் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர் நிச்சயமாக எங்கள் திட்டத்தில் இருக்கிறார் [இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான திட்டத்தில் சஞ்சு இருக்கிறார்” என்றார்.
ஹர்திக் பாண்டிய என்னதான் ஆனார்? என்ற கேள்விக்கு சேத்தன் சர்மா பதில் அளிக்கையில், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்னும் முழு உடல் தகுதி பெறாததால் அவர் கருதப்படவில்லை. “இந்திய அணியில் ஹர்திக் மிக முக்கியமான அங்கமாக இருந்தார்,” என்று சேத்தன் கூறினார். "ஆனால் காயங்களுக்குப் பிறகு, அவர் 100% உடற்தகுதி பெறும் வரை, அவர் 100% உடல்தகுதியுடன் இருக்கிறார், செல்லத் தயாராக இருக்கிறார், அவர் பந்துவீசுகிறார் மற்றும் மேட்ச் ஃபிட்டாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வரை, அவரை நாங்கள் கருத்தில் கொள்ள முடியாது."
இந்திய அணியில் இருந்து வெளியேறியதில் இருந்து ஹர்திக் எந்த உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை, ஆனால் அவரது ஐபிஎல் அணி உடற்தகுதி சிக்கலாக இருந்தபோதிலும் அவரை கேப்டனாக நியமித்தது குஜராத். ஐபிஎல் போட்டியில் ஹர்திக் மீண்டும் உலகக் கோப்பை அணிக்கு வந்தால், தேர்வு செயல்முறை பாதிக்கப்படுகிறதா என்று சேத்தனிடம் கேட்கப்பட்டது. ஐபிஎல்லில் ரன்களை எடுத்தால், மீண்டும் தனது இடத்தைப் பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறிய சேத்தன், ஆனால் ஹர்திக் நாட்டுக்காக செய்ததை ஒரு நிமிடத்தில் மறந்துவிடக் கூடாது, என்றார்.
நாட்டுக்காக ஹர்திக் என்ன செய்து விட்டார் என்று நிருபர்களும் சேத்தன் சர்மாவிடம் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு மார்க்கெட் இருக்கிறது, அதனால்தான் அவரே தெனாவட்டாக ரஞ்சி டிராபி ஆட மாட்டேன் என்று விலகியுள்ளார், ஹர்திக் பாண்டியா ஒரு கடின உழைப்பாளி அல்ல, இன்ப நாட்டம் உடையவர் என்பது பல தருணங்களிலும் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதானே!
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.