India vs Sri Lanka: பிரிதிவி ஷா, இஷான் கிஷன் 15 ஒவர்களில் முடித்து விட்டனர்: ஷிகர் தவான் பாராட்டு

இஷான் கிஷன்.

பிரித்வி ஷா, இஷான் கிஷன் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 17 ஓவர்களிலேயே 140 ரன்களை எட்டியிருந்தது, அங்கேயே போட்டி முடிந்து விட்டது என்கிறார் ஷிகர் தவான்.

  • Share this:
    கொழும்புவில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய இளம் வீரர் பிரிதிவி ஷா, அறிமுக போட்டியில் ஆடிய இஷான் கிஷன் இலங்கை பவுலிங்கை துவம்சம் செய்ய இந்தியா 80 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது.

    பிரித்வி ஷா, இஷான் கிஷன் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 17 ஓவர்களிலேயே 140 ரன்களை எட்டியிருந்தது, அங்கேயே போட்டி முடிந்து விட்டது என்கிறார் ஷிகர் தவான்.

    பிரிதிவி ஷா


    பிரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாச இஷான் கிஷன் 42 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் விளாசினார். தவான் 95 பந்துகளில் நிதானமாக ஆடி 86 ரன்களை எடுக்க இந்தியா 36.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    Also Read: Shikhar Dhawan | விராட் கோலிக்குப் பிறகு அதிவேக 6,000 ரன்கள்: ஷிகர் தவான் சாதனை

    இந்த வெற்றி குறித்து ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் கேப்டன் ஷிகர் தவான் கூறும்போது, “நாங்கள் பேட் செய்த போது எதிர்முனையிலிருந்து பிரித்வி ஷா, இஷான் கிஷன் பேட்டிங்கைப் பார்க்க அற்புதமாக இருந்தது.

    Also Read: India vs Sri Lanka| தவானின் இளம்படை அட்டகாசம்: இலங்கைப் பந்து வீச்சு துவம்சம்- இந்தியா அபார வெற்றி

    சும்மா ஆடுங்கள் என்றேன், அவர்கள் அணியில் இருப்பது பெரிய பலம். ஐபிஎல் கிரிக்கெட் மூலம் இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகியுள்ளது. பிரிதிவி ஷாவும், இஷான் கிஷனும் பேட் செய்த விதத்தில் முதல் 15 ஓவர்களிலேயே ஆட்டம் முடிந்து விட்டது. அதன் பிறகு நாங்கள் சும்மா தட்டித் தட்டி வெற்றிக்குக் கொண்டு சென்றோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சதம் எடுக்கும் எண்ணம் இருந்தது, ஆனால் இலக்கு அதற்கு தோதாக இல்லை. அதனால் நாட் அவுட்டாக வெளியே வருவோம் என்பதில் கவனம் செலுத்தினேன். சூரியகுமார் யாதவ் இறங்கிய போது கூட சதம் எடுக்கும் வாய்ப்பு இருந்தது. நான் என் திறமையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக்க வேண்டும்.

    அனைவருமே நன்றாக ஆடினர். பிட்சில் பந்துகள் கொஞ்சம் திரும்பும் என்று தெரிந்தது. ஸ்பின்னர்கள் பிரமாதமாக வீசி ஆட்டத்துக்குள் கொண்டு வந்தனர், செகல், குல்தீப், குருணால் அட்டகாசமாக வீசினர்” என்றார் ஷிகர் தவான்.
    Published by:Muthukumar
    First published: