• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs Sri Lanka| தவானின் இளம்படை அட்டகாசம்: இலங்கைப் பந்து வீச்சு துவம்சம்- இந்தியா அபார வெற்றி

India vs Sri Lanka| தவானின் இளம்படை அட்டகாசம்: இலங்கைப் பந்து வீச்சு துவம்சம்- இந்தியா அபார வெற்றி

அறிமுக ஒருநாளில் அரைசதம் கண்ட இஷான் கிஷன். மகிழ்ச்சியில் தவான்.

அறிமுக ஒருநாளில் அரைசதம் கண்ட இஷான் கிஷன். மகிழ்ச்சியில் தவான்.

கொழும்பு பிரேமதாசா என்ற அருமையான மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தவான் தலைமை இந்திய இளம்படை இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 80 பந்துகளை மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது.

  • Share this:
முதலில் பேட் செய்த இலங்கை அணி நன்றாகத் தொடங்கி பிறகு சரிந்து இறுதியில் கொஞ்சம் சாத்தி எடுத்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி பிரிதிவி ஷா, இஷான் கிஷன் அதிரடியிலும் ஷிகர் தவான் நிதானத்திலும் 36.4ஓவர்களில் 263/3 என்று அபார வெற்றி பெற்றது.

இது 300 ரன் பிட்ச். இதில் இலங்கை சொதப்பியது.

பிரிதிவி ஷா ஏதோ ஐபிஎல் போல் தொடக்கத்திலேயே வெளுத்து வாங்கினார், ஆனால் ஆஃப் திசையில் அனைத்தும் மிகப்பிரமாதமான டெஸ்ட் கிளாஸ் ஷாட்களாகும் 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடாமல் குனிய பின் ஹெல்மெட்டில் அடிவாங்கி அதன் பிறகு தாக்குப் பிடிக்காமல் ஸ்பின்னர் டிசில்வாவிடம் வீழ்ந்தார். அதன் பிறகு இறங்கிய புலிக்குட்டி இஷான் கிஷன் வந்தது முதல் அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 59 ரன்கள் விளாசி அறிமுக ஆட்டத்திலேயே அசத்தல் அரைசதம் விளாசினார்.

தவான் 86 நாட் அவுட். சூரிய குமார் யாதவ் 20 பந்துகளில் 31 நாட் அவுட் என்று வெற்றிக்கு இட்டுச் செல்ல இந்த அணிக்கு சற்றும் பொருந்தாத மணீஷ் பாண்டே சொதப்பலாக ஆடி 40 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கை பவுலர்களால் பிரிதிவி ஷா, இஷான் கிஷனை கட்டுப்படுத்த முடியவில்லை, எங்கு போட்டாலும் அடி என்ற ஒரு பாலிசியில் இருந்தனர்.

மாறாக இலங்கை அணி நன்றாகத் தொடங்கியது, ஆனால் அனுபவ யஜுவேந்திர செகல், குல்தீப் யாதவ் மற்றும் சிக்கன குருணால் பாண்டியாவிடம் சிக்கியது. மிடில் ஓவர்களில் சீராக விக்கெட்டை வீழ்த்தி இலங்கையை முடக்கினர்.இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா டீசண்டாகத் தொடங்கி 9 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ தீபக் சாஹரை மிக அருமையாக ஹை பிளிக்கில் சிக்ஸ் அடித்து நல்ல பார்மில் இருந்தார், ஆனால் செகல் வந்தவுடன் முதல் பந்திலேயே ஏந்திக் கொடுத்து 35 பந்து 33 ரன்களில் வெளியேறினார். இலங்கை பேட்ஸ்மென்கள் தன்னம்பிக்கையுடன் ஆடினர், ஆனால் இந்திய ஸ்பின் மூவர் வந்தவுடன் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யத் தவறினர்.

அறிமுக வீரர் பனுகா ராஜபக்ச செகலை வந்தவுடனேயே மிகப்பெரிய சிக்ஸ் விளாசினார், பிறகு ஸ்லாக் ஸ்வீப்பில் இன்னொரு சிக்ஸ் விளாசி 22 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவிடம் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் மினோத் பனுகாவும் 27 ரன்களில் குல்தீப்பிடம் சிக்கினார்.ஸ்பின்னர்கள் மூவரும் கிடுக்கிப் பிடி போட தனஞ்ஜெயாவை (14) குருணால் வீழ்த்தினார். சரித் அசலங்கா (38), தாசுன் ஷனகா (39) ஸ்கோரை 166 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அசலங்கா தீபக் சாகர் பந்தை இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசியில் சமிக கருணரத்னே (43), மற்றும் துஷந்த சமீராவின் சில அதிரடியினால் இலங்கை அணி 262/9 என்று இலக்கை எட்டியது, குறிப்பாக புவனேஷ் குமார் (0/63) கடைசி ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டார். ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும் படி இல்லை. 5 ஓவர் 34 ரன் 1 விக்கெட். ஸ்பின்னர்கள் செகல், குல்தீப், குருணால் சேர்ந்து 29 ஓவர் 126 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குறிப்பாக குருணால் 10 ஒவர் 26 ரன் ஒரு விக்கெட்.

பிரிதிவி ஷா, இஷான் கிஷன் அட்டகாச அதிரடி:

முதல் ஓவரிலேயே நல்ல ஸ்பீட் வீசிய சமீராவை 2 பவுண்டரிகள் விளாசினார் பிரித்வி. பிறகு இசுரு உதனாவையும் விட்டு வைக்காமல் கெத்தான பவுண்டரிகளை அடித்தார். பாயிண்ட் கவர் இடையில் 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசினார். பிரிதிவி ஷா கால்களை பெரிதாக நகர்த்தாவிட்டாலும் டைமிங் அற்புதம். குட்டி சேவாகைப் பார்ப்பது போல்தான் இருந்தது. 24 பந்துகள்ல் 43 ரன்கள் எடுத்து அவர் ஸ்பின்னர் பந்தை தூக்கி கையில் கொடுத்து வெளியேறினார்.

அறிமுகப் போட்டீயில் ஆடும் பயமறியா காளை இஷான் கிஷன் வந்து இறங்கியவுடனேயே தனஞ்ஜய டிசில்வா பந்தை எகிறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் விளாசி பிறகு அடுத்த பந்தே கவர் திசையில் பவுண்டரி அடித்து தொடங்க ரன் ரேட் டி20 போல் ஓவருக்கு 10 ரன்கள் என்ற வீதத்தில் சென்று கொண்டிருந்தது.

பிரிதிவி ஷா.


பிறகு டிசில்வாவை ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசினார் இஷான் கிஷன். அசலங்கா பந்தை தூக்கி அடித்து ஒரு பவுன்ஸ் பவுண்டரியில் அறிமுக ஒருநாள் போட்டியில் அரைசதம் கண்டார் இஷான் கிஷன். கடைசியில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33 பந்துஇல் 59 எடுத்து ரிஸ்ட் ஸ்பின்னர் சண்டகனிடம் அவுட் ஆனார். இஷான் கிஷன். ஆனால் இந்தியா 18வது ஓவரில் 143 ரன்கள், இங்கேயே மேட் ச் முடிந்து விட்டது.

இஷான் கிஷன்.


தவான் ஸ்டெடி:

ஷிகர் தவான் முதல் 5 ஓவரில் இந்திய ஸ்கோர் 50 ஆக இருந்த போது 7 ரன்களையே எடுத்திருந்தார். இந்தியா 100 ரன்களை 13வது ஓவரில் கடக்கும் போது தவான் 16 ரன்களியே எடுத்திருந்தார். தவான் 1 பவுண்டரியை மட்டுமே அடித்திருந்தார். மணீஷ் பாண்டே இறங்கியவுடன் தான் தவான் பவுண்டரிகளை அடித்தார், 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று அவர் 95 பந்துகளில் 86 என்று கடைசியில் வேகம் கூட்டினார். இந்தியா 36.4 ஓவர்களில் 263/3 என்று அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பிரிதிவி ஷா தேர்வு செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: