India vs Sri Lanka | 2-வது ஒருநாள்: ஹாட்ரிக் வாய்ப்பை தவற விட்ட செகல் (வீடியோ)

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய செகல்.

கொழும்புவில் நடைபெறும் 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது, இந்திய லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர செகல் அருமையாக வீசி வருகிறார், துரதிர்ஷ்டவசமாக ஹாட்ரிக் வாய்ப்பை நழுவ விட்டார்.

  • Share this:
    இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையைத் தவிடு பொடி செய்ய, இந்த முறை அணியில் மாற்றமில்லாமல் களமிறங்கியது, இலங்கை தொடக்க வீரர்கள் அவிஷ்க்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா அருமையான தொடக்கம் கொடுத்தனர்.

    இருவரும் சேர்ந்து 79 பந்துகளில் 77 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்து நன்றாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது 14வது ஓவரை வீச வந்தார் செகல். மினோத் பனுகா 36 ரன்களில் 6 பவுண்டரிகள் என்று நன்றாக ஆடிவந்தார் முதல் போட்டியை விட ஆக்ரோஷமாகவே ஆடினார்.

    இவர் செகல் பந்தை மேலேறி வந்து அடித்தார் ஷாட் சரியாகச் சிக்காமல் மிட்விக்கெட்டில் மணீஷ் பாண்டே கையில் போய் உட்கார்ந்தது, முதலில் ஸ்லிப்பில் பாண்டே ஒரு கேட்சை விட்டதனால்தான் இந்த கூட்டணி ரன் எண்ணிக்கையே இந்த அளவுக்கு வந்தது.

    மினோத் பனுகா ஆட்டமிழந்தவுடன் அபாய வீரர் பனுகா ராஜபக்சே இறங்கினார். டாப் ஸ்பின்னரை வீசினார் செகல், பந்து ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி எட்ஜ் ஆனது இஷான் கிஷன் நல்ல கேட்சை எடுக்க டக் அவுட் ஆனார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Also Read: Tokyo Olympics Anti-sex beds| ஓலிம்பிக் கிராமத்தில் உடலுறவை தடுக்க கார்ட்போர்டு கட்டில்?- ‘பகீர்’ தகவலை புகைப்படங்களுடன் பகிர்ந்த அமெரிக்க வீரர்- கமிட்டி மறுப்பு

    செகல் ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார். தனஞ்ஜயா இறங்கினார், இவரையும் வீழ்த்தி ஹாட்ரிக் எடுப்பாரா என்ற ஆவல் எழுந்தது, அது ஒரு ஃபுல் கூக்ளி பந்து கால்காப்பில் பட்டு மிட்விக்கெட்டிற்குச் சென்றது, ஒரு அரைகுறை முறையீடு எழுப்பினார் செகல். இந்த வாய்ப்பை அவர் நழுவ விட்டு விட்டார், அது அவருக்கே தெரிந்திருந்தது.

    இலங்கை அணி தற்போது 19வது ஓவரில் 96/2 என்று ஆடி வருகிறது. தனஞ்ஜய டிசில்வா 10 ரன்களுடனும் அவிஷ்கா பெர்னாண்டோ 38 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: