SL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!

ind vs sl

கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையுடன் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும்.

  • Share this:
இலங்கை அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையுடன் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருக்கும் நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி ஜூலை 28 அன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஜூலை 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

Also Read:   உங்கள் குழந்தைக்கு இன்னும் ஆதார் அட்டை பதிவு செய்யவில்லையா? வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்

கொழும்பு மைதானத்தில் டாஸ் வென்ற இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதல் பேட்டிங் செய்தது இந்திய அணி. க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த சில வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இந்திய தரப்பில் சேத்தன் சகாரியா, தேவ்துத் படிக்கல், நிதிஷ் ராணா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 பேர் அறிமுக வீரர்களாக களமிறக்கப்பட்டனர். இலங்கையின் ரமேஷ் மெண்டிசும் அறிமுகம் கண்டார்.

தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், தவான் ஆகியோரின் நிலையான ஆட்டத்தால் ஓரளவு நல்ல ஸ்கோர் கிடைத்தது. இருப்பினும் இலங்கை ஸ்பின்னர்களின் ஆதிக்கம் பிற்பாதியில் இருந்ததால் இந்திய அணியால் பெரிய அளவில் ஸ்கோரை குவிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 40 ரன்களும். தேவ்துத் படிக்கல் 29 ரன்களும் எடுத்தனர்.

Also Read:   புதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..

133 ரன்கள் என்ற எட்டிப்பிடிக்கும் இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது இலங்கை. இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் இலங்கையின் ஆட்டத்துக்கு கடிவாளம் போட்டனர். சீரான இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்டை பறிகொடுத்தது. கடைசி கட்டத்தில் மழை குறுக்கீடு செய்தது.

கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 19வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் 12 ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரரான சேத்தன் சகாரியா 4 பந்துகளில் 8 ரன்களை விட்டுக்கொடுத்ததால், இலங்கை அணி 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அணி இலங்கை அணியுடன் டி20 போட்டியில் தோல்வி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கை அணிக்காக 40 ரன்கள் அடித்ததுடன், 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்த தனஞ்செயா டி சில்வாவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

2வது டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது. 3வது போட்டி ஜூலை 29ம் தேதி இரவு 8 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
Published by:Arun
First published: