Home /News /sports /

2வது டி20: ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இல்லை- விளையாடப்போவது யார் யார்?

2வது டி20: ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இல்லை- விளையாடப்போவது யார் யார்?

ஷிகர் தவான், இஷான் கிஷன்

ஷிகர் தவான், இஷான் கிஷன்

இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் கேப்டன் ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாசிட்டிவ்வை அடுத்து அவர் வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டார், இவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்களுக்கு உடனடியாக கொரோனா சோதனை மேற்கொண்டதில் வெளியான ரிசல்ட்டில் நெகட்டிவ் என்று ஆனதையடுத்து நிம்மதியடைந்தனர்.

    ஆனாலும் அதற்குள் இவர்கள் களமிறங்கி ஆடுவது சரியாகாது என்பதால் இந்த 8 வீரர்கள், ஷிகர் தவான் உட்பட இன்று களமிறங்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

    ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, செகல், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, கிருஷ்ணப்பா கவுதம், இஷான் கிஷன் ஆகியோர் குருணாலுடன் நெருக்கமாக இருந்த வீரர்களாவர்.

    Also Read: Exclusive | 15 ஆண்டுகால கடின உழைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது: பவானி தேவி

    எனவே இன்று முற்றிலும் புதிய இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். புவனேஷ்வர் குமார் கேப்டன்சியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், ராகுல் சாகர், தீபக் சாகர், குல்தீப் யாதவ், சக்காரியா, வருண் சக்ரவர்த்தி என்று புது வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்று 8 மணிக்கு 2வது டி20 நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. நாளை, அதாவது வியாழக்கிழமை, ஜூலை 29-ல் 3வது டி20 போட்டி நடைபெறும்.

    Also Read: குருணால் பாண்டியா தனி விடுதிக்கு மாற்றம் : மற்ற 8 வீரர்களுக்கான டெஸ்ட் ரிப்போர்ட் வெளியானது

    தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கையிலிருந்து திரும்ப, குருணால் பாண்டியா தனிமைக்காலம் முடிந்து மீண்டும் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் ஆன பிறகு இந்தியா திரும்புவார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona positive, India vs srilanka, Krunal Pandya, Shikhar dhawan

    அடுத்த செய்தி