ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Sri Lanka-நான் ‘டச்’-ல தான் இருக்கேன், என்னை உட்கார வெச்சுடாதீங்க- ரவீந்திர ஜடேஜா

India vs Sri Lanka-நான் ‘டச்’-ல தான் இருக்கேன், என்னை உட்கார வெச்சுடாதீங்க- ரவீந்திர ஜடேஜா

ஜடேஜா.

ஜடேஜா.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இலங்கைக்கு எதிரான தொடக்க டி20-க்கு முன்னதாக தனது முதல் வலைப் பயிற்சிக்குப் பிறகு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 • 1 minute read
 • Last Updated :

  இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இலங்கைக்கு எதிரான தொடக்க டி20-க்கு முன்னதாக தனது முதல் வலைப் பயிற்சிக்குப் பிறகு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

  கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக புனர் சிகிச்சை பெற்ற ஜடேஜா தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் கடைசி இரண்டு தொடர்களை தவறவிட்டார்.

  இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் ஜடேஜா கூறியிருப்பதாவது:

  "நான் மிகவும் நன்றாக உணர்கிறேன், நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன், இறுதியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன். எனது மறுவாழ்வை சரியான முறையில் செய்ய ஆர்வமாக இருந்தேன். என்.சி.ஏ-வில் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். தொடருக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆடாமல் இருந்து விட்டு இப்போது விளையாடுகிறேன்."

  "பெங்களூருவில் பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன். அதனால் டச்சில்தான் இருக்கிறேன். . இன்று, எனது முதல் பயிற்சிக்கு இங்கு வந்த பிறகு மிகவும் நன்றாக உணர்ந்தேன்." என்றார் ஜடேஜா.

  வியாழன் அன்று தொடங்கும் மூன்று டி20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs srilanka, T20, Test series