• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • India vs Sri Lanka: இந்த அடி போதுமா?- அசரவைத்த தீபக் சாகர் ஆட்டம்; தொடரை வென்றது ஷிகர் தவான் இளம்படை-புவனேஷ்வர் உறுதுணை

India vs Sri Lanka: இந்த அடி போதுமா?- அசரவைத்த தீபக் சாகர் ஆட்டம்; தொடரை வென்றது ஷிகர் தவான் இளம்படை-புவனேஷ்வர் உறுதுணை

வெற்றி நாயகர்கள் தீபக் சாகர்- புவனேஷ்வர் குமார்

வெற்றி நாயகர்கள் தீபக் சாகர்- புவனேஷ்வர் குமார்

கொழும்புவில் நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் தீபக் சாகரின் அசரவைத்த  69 ரன்களினால் இந்தியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

 • Share this:
  276 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் சூரிய குமார் யாதவ் (55) விக்கெட்டையும் இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது, அப்போது ஜோடி சேர்ந்த தீபக் சாகர், புவனேஷ்வர் குமார் ஜோடி வெற்றிக்கு இட்டுச் சென்றனர். தீபக் சாகர் 82 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ புவனேஷ்வர் குமார் 28 பந்துகளில் 19 நாட் அவுட்.

  இருவரும் சேர்ந்து 84 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இந்தியா 49.1 ஓவரில் 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை ஒரேயொரு லிஸ்ட் ஏ அரைசதம் மட்டுமே அடித்த தீபக் சாகர் விக்கெட்டைக் கூட எடுக்க முடியாத அணிதான் இந்த இலங்கை அணி, ரணதுங்கா என்னடாவென்றால் இந்தியா பி அணி என்றார்.

  சாகர் நிதானமாக ஆடியதுதான் ஆச்சரியம். அவசரப்படவில்லை, கட்டுப்பாடுடன் கூடிய ஷாட்களை கடைசியில் ஆடினார், மற்றபடி ஒன்று, இரண்டு என்று எடுத்து அசரவைத்தார். இலங்கையின் சிறந்த பவுலர்களான வனிந்து ஹசரங்கா, சமீரா ஆகியோர் என்ன முயன்றும் தீபக் சாகர் அனாயசமாக ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தார். முதல் 45 பந்துகளில் ஒரு பவுண்டரி தான் அடித்தார், ஆனால் அதன் பிறகு பாயிண்ட், மிட்விக்கேட், ஸ்கொயர்லெக் பிளிக், சண்டகன் பந்தை லாங் ஆன் மேல் இந்திய அணியின் ஒரே சிக்ஸ் என்று தீபக் சாகர் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தார்.

  சூரியகுமார் யாதவ் எனும் அனாயாச வீரன்:

  முன்னதாக ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன் ரேட்டை தொய்ய விடாமல் அட்டகாசமான, களவியூகத்தை ஏமாற்றும் அருமையான 6 பவுண்டரிகளுடன் சூரிய குமார் யாதவ் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததுதான் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியதன் காரனம். இடைவெளிகளில் பந்தை சிப் ஷாட் மூலம் தூக்கி அடிக்கும் லாவகம்.. இப்படிப்பட்ட வீரர் 3 வடிவங்களுக்குமானவர் என்பதை உறுதி செய்தது. இவர் நேர் பந்தை திருப்ப முயன்று எல்.பி.ஆகும் போது இந்தியா 160/6. குருணால் பாண்டியா ஷார்ட் பிட்ச் பந்தில் அடி உதை வாங்கினாலும் 35 ரன்களுக்கு நின்று பங்களிப்பு செய்தார்.

  அற்புதன் சூரியகுமார் யாதவ்.


  மணீஷ் பாண்டே 31 பந்தில் 37 ரன்கள் எடுத்து ரன்னர் முனையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

  முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய பிரிதிவி ஷா பிறகான சரிவு:

  கடந்த போட்டியில் போட்டு சாத்தி எடுத்ததையடுத்து இந்த முறை விடமாட்டோம் என்பது போல் இலங்கை பந்து வீச்சு திட்டமிட்டபடி அமைந்தது. ஸ்பின்னை கொஞ்சம் முன்னமேயே கொண்டு வந்தனர். ஹசரங்காவின் கூக்ளிக்கு பவுல்டு ஆனார். தேவையில்லாத ஷாட். முதல் ஓவரில் பவுண்டரிகளாக வீசி கடைசியில் 11 பந்துகளிள் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஜிதாவின் முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார் பிரிதிவி ஷா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இஷான் கிஷன் சொதப்பல்:

  இஷான் கிஷன் டெபுவில் அரைசதம் விளாசினார் ஆனால் நேற்று ரஜிதா பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டு ஒரு ரன்னில் வெளியேறினார். மணீஷ் பாண்டே, கேப்டன் தவான் கொஞ்சம் நிலை நிறுத்தினர் ஆனால் தவான் ஹசரங்காவின் நேர் நேர் தேமா பந்தை லெக் திசையில் திருப்பி விட நினைத்து எல்.பி. ஆனார்.

  இந்தியா 65/3 என்றாலும் சூரியகுமார் யாதவ் விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் அபாரமாக ரன் ரேட்டை தக்க வைத்தார். பாண்டே அப்போதுதான் 50 ரன் கூட்டணி அமைத்த நிலையில் ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார். சூரியகுமாரின் நேர் டிரைவ் பவுலர் கையில் பட்டு ஸ்டம்பில் பட பாண்டே வெளியில் இருந்தார். ஹர்திக் பாண்டியா வந்தவுடன் தூக்கி கையில் கொடுத்டு டக் அவுட் ஆனார். குருணால் பாண்டியாவுக்கு ஷார்ட் பிட்ச் விருந்து வைத்தனர், தலையில் அடியெல்லாம் வாங்கினார், ஆனால் 35 ரன்களைப் போராடி எடுத்து அபாரமான ஹசரங்கா பந்தில் பவுல்டு ஆனார்.

  இங்கு ஆட்டம் முடிந்து விட்டது என்று நினைத்தது இலங்கை, இதுதான் தவறாகிப் போனது. தீபக் சாகர் முதலில் 26 பந்துகளில் 9 ரன்கள் என்றுதான் ஆடினார். பிறகு அற்புதமாக ஆடினார். இலக்கு 47 ரன்களிலிருந்து மெதுவே இறங்கி 24 என்று ஆனது. ஹசரங்கா ஓவர் முடியட்டும் என்று காத்திருந்து கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. கடைசியில் 2 பவுண்டரிகள் அடிக்க 6 பந்துகளில் 3 ரன்கள் ஆனது இலக்கு சாகர் பவுண்டரி அடித்து முடித்தார்.

  நல்ல தொடக்கம் பிறகு சரிவு பிறகு முடிவில் எழுச்சி இலங்கை இன்னிங்ஸ்:

  முன்னதாக இலங்கை அணி 77/0 என்று அபாரமாகத் தொடங்கி யஜுவேந்திர செகலின் ஒரே ஓவர் 2 விக்கெட்டுகளினால் சரிவடைந்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 71 பந்துகளில் 50 ரன்களையும் சரித் அசலங்கா 68 பந்துகளில் 65 ரன்களையும் விளாச கடைசியில் ஆல்ரவுண்டர் சமிகா கருண ரத்னே 33 பந்துகளில் 44 ரன்களை விளாச இலங்கை அணி 276 ரன்கள் என்ற நல்ல இலக்கை எட்டியது. செகல் 50 க்கு 3 விக்கெட் கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

  8வது ஓவர் முடிந்த பிறகே 97 பந்துகள் பவுண்டரி அடிக்க திணறியது இலங்கை. 77/0 என்ற நிலையிலிருந்து செகலின் அற்புதமான பந்து வீச்சில் 134/4 என்று ஆனது இலங்கை. அதன்பிறகு அசலங்கா, கருண ரத்னேவின் இன்னிங்ஸினால் 276 ரன்களை எட்டியது ஆனாலும் பயனில்லை. ஆட்ட நாயகன் தீபக் சாகர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: