India vs Sri Lanka| பயிற்சியாளர் இப்படிச் செய்யலாமா: மிக்கி ஆர்தருக்குக் குவியும் கண்டனங்கள்

ஷனகா-ஆர்தர் வாக்குவாதம்.

கிரிக்கெட் அணியை வழிநடத்துவது அணியின் கேப்டனே, பயிற்சியாளர் என்பவர் உத்தி வகுப்பு எடுக்கலாமே தவிர மைதானத்தில் கேப்டனின் முடிவுகளில் அவர் தலையிட முடியாது. இதுதான் வழக்கம், ஆனால் இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இந்த நயநாகரிகத்தை மீறி களத்திலேயே இலங்கை கேப்டன் சனகாவுடன் வாக்குவாதம் புரிந்தது கடும் கண்டனங்களைக் கிளப்பியது.

  • Share this:
    கிரிக்கெட் அணியை வழிநடத்துவது அணியின் கேப்டனே, பயிற்சியாளர் என்பவர் உத்தி வகுப்பு எடுக்கலாமே தவிர மைதானத்தில் கேப்டனின் முடிவுகளில் அவர் தலையிட முடியாது. இதுதான் வழக்கம், ஆனால் இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இந்த நயநாகரிகத்தை மீறி களத்திலேயே இலங்கை கேப்டன் சனகாவுடன் வாக்குவாதம் புரிந்தது கடும் கண்டனங்களைக் கிளப்பியது.

    அன்று இந்திய அணி 193/7 என்று இருந்த நிலையில் வெற்றிக்கு தள்ளாமல் இலங்கை அணி கேப்டன் தவறு மேல் தவறு செய்ய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கடுப்பாகி உடல் பாவனையில் தன் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார், இதை ரசிகர்கள் பலரும் மீம் போட்டு கலாய்த்தனர்.

    இந்நிலையில் தீபக் சாகர் அதுவரை 12 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோரை வைத்திருந்தவர் 69 ரன்கள் எடுத்து வெற்றி பெறச் செய்தது எந்த எதிரணியினருக்கும் கோபத்தை வரவழைக்கவே செய்யும். ஆனால் அதை வெளிப்படுத்த நாகரிகமான வழிமுறைகள் இருக்கின்றன. மைதானத்திலேயே வந்து கத்துவது போன்றவையெல்லாம் கால்பந்தில்தான் நடக்கும்.

    Also Read: இலங்கை கோச் ஆர்தர் ஆத்திரம்: மீம்கள் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்

    இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் போட்டி முடிந்தபின் மைதானத்தில் நின்றிருந்த கேப்டன் சனகாவுடன் வந்து ஏதோ பேசினார். இருவருக்கும் இடையிலான பேச்சு சில வினாடிகளில் வாக்குவாதமாக மாறியது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சூடாகப் பேசியது அவர்களின் முகபாவனையில் தெரிந்தது.

    அப்போது பயிற்சியாளர் ஆர்தரைப் பார்த்து கேப்டன் சனகா கோபமாக ஏதோ பேச, உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல் அர்னால்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இலங்கை அணியின் கேப்டன் சனகாவுக்கும், பயிற்சியாளர் ஆர்தருக்கும் இடையிலான வாக்குவாதம் ஓய்வறையில் நடந்திருக்கலாம். இப்படி மைதானத்தில் இருவரும் வாக்குவாதம் செய்ததைத் தவிர்த்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    Also See: INDvsSL | பேச்சடா பேசுனா.. இலங்கை அணியை தெறிக்க விடும் மீம்ஸ்

    மிக்கி ஆர்தர் ஒரு சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் ஆவார், ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்த போது வீரர்களை தண்டிப்பதில் குறியாக இருந்தார் அவர். மைக்கேல் கிளார்க்கும் இவரது வழிமுறைகளுக்கு ஒத்து ஊதினார், கடைசியில் இவரது வழிமுறைகள் மிகவும் பிற்போக்குத் தனமாக இருப்பதை உணர்ந்து ஆஸ்திரேலியா இவரை கழற்றி விட்டது. பாகிஸ்தானிலும் இப்படித்தான் மிக்கி ஆர்தர் நடந்து கொண்டார்.

    இந்நிலையில் அவரது செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
    Published by:Muthukumar
    First published: