• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs Sri Lanka 2021: பிரிதிவி ஷா இன்னிங்ஸ் குறித்து சேவாகின் ‘மைல்டு டச்’ : குஷியான ரசிகர்கள்

India vs Sri Lanka 2021: பிரிதிவி ஷா இன்னிங்ஸ் குறித்து சேவாகின் ‘மைல்டு டச்’ : குஷியான ரசிகர்கள்

பிரிதிவி ஷா இன்னிங்ஸில் ஆச்சரியமடைந்த சேவாக்.

பிரிதிவி ஷா இன்னிங்ஸில் ஆச்சரியமடைந்த சேவாக்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 263 ரன்கள் இலக்கை விரட்டிய போது தொடக்க வீரர் பிரிதிவி ஷா வெளுத்து வாங்கினார், டி20 போல் ஓவருக்கு 10 ரன்கள் பக்கம் வந்து 10ம் வாய்ப்பாடு ரேஞ்சில் விரட்டல் தொடங்கியது.

  • Share this:
    கொழும்பில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 263 ரன்கள் இலக்கை விரட்டிய போது தொடக்க வீரர் பிரிதிவி ஷா வெளுத்து வாங்கினார், டி20 போல் ஓவருக்கு 10 ரன்கள் பக்கம் வந்து 10ம் வாய்ப்பாடு ரேஞ்சில் விரட்டல் தொடங்கியது.

    பிரிதிவி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசினார். 5 ஓவர்களில் 50 ரன்கள் வந்த போது கேப்டன் தவான் வெறும் 7 ரன்களையே எடுத்திருந்தார். பிறகு இஷான் கிஷன் இறங்கி அறிமுக ஒருநாள் போட்டியின் முதல் பந்திலேயே இறங்கி வந்த் சிக்ஸ் அடித்து அடுத்த பந்தையே பவுண்டரிக்கு விரட்டி 59 ரன்களை விளாசி இந்திய அணி 13 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்த போது ஷிகர் தவான் 16 ரன்களில்தான் இருந்தார், அந்த அளவுக்கு இளம் வீரர்கள் காட்டடி தர்பார் நடத்தினர்.

    தவான் நிதானமாக ஆடி இளம் படை ஆட்டமிழந்தவுடன் பவுண்டரி அடித்தார் சிக்சர் அடித்தார் கடைசியில் 86 ரன்களை 95 பந்துகளில் எட்டினார். வெற்றி பெறச் செய்தார்.

    Also Read: India vs Sri Lanka: பிரிதிவி ஷா, இஷான் கிஷன் 15 ஒவர்களில் முடித்து விட்டனர்: ஷிகர் தவான் பாராட்டு

    இதில் ஆட்ட நாயகன் விருது பிரித்வி ஷாவுக்கு அளிக்கப்பட்டது, அவரது இன்னிங்ஸை பலரும் பாராட்டினர், அசாதாரண வகையைச் சேர்ந்தது அது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஏற்கெனவே ரவிசாஸ்திரி ஒருமுறை பிரிதிவி ஷா பேட்டிங்கை ஒப்பிடும்போது லாரா, சச்சின், சேவாகின் கலவை அவர் என்றார். அதை அப்படியே பிடித்துக் கொண்ட சேவாக், நேற்றி இன்ஸ்டாகிராமில் லாரா, சச்சினுடன் தானும் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரிதிவி ஷாவின் முதல் 6 ஓவர்களை விதந்தோதியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Virender Sehwag (@virendersehwag)






    பிரிதிவி ஷாவின் 9 பவுண்டரிகளும் கண்களில் ஒத்திக் கொள்ளும் ரகமாக அமைந்தது. இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: