இலங்கைக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் குருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அதிர்ச்சித் தகவலை அடுத்து ஒட்டுமொத்த அணிக்கும் கொரோனா ஆர்.டி.பிசிஆர் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் மற்றவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்ததையடுத்து நிம்மதி ஏற்பட்டுள்ளது, குருணால் பாண்டியா தனி விடுதிக்கு மாற்றப்பட்டார். குருணால் பாண்டியா மவுண்ட் லாவினியா ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் கொழும்புவில் உள்ளனர்.
போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்களுக்கும் உடனடியாக ஆர்டி பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் ரிசல்ட் நெகட்டிவ் ஆனதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி 3 டி20 போட்டிகளை முடித்துக் கொண்டு ஜூலை 30ம் தேதி திரும்புகின்றனர், ஆனால் குருணால் அணியுடன் பயணிக்க மாட்டார். அவர் தனிமையில்தான் இருப்பார், மீண்டும் ஒரு ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை முடிந்த பிறகே அவர் இந்தியாவுக்கான விமானத்தில் ஏற முடியும்.
இந்த கொரோனா பிரச்சனையினால் தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் அணியுடன் இணையக் காத்திருக்கும் சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட்டின் இளம்படை மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இப்போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதைதொடர்ந்து, நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona positive, Krunal Pandya