Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs SL | ஹர்டிக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி... Playing XI இது தான்?

Ind vs SL | ஹர்டிக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி... Playing XI இது தான்?

ஹர்டிக் பாண்டியா

ஹர்டிக் பாண்டியா

India vs Sri Lanka | இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும்  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த உள்ளது.

அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார்படுத்தும் விதமாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம்வீரர்களை பிசிசிஐ தயார்படுத்தி வருகிறது. டி20 போட்டிகளில் திறமையாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணியின் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலமாக உள்ளனர்.

உத்தேச இந்திய அணி : இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் / ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்டிக் பாண்டியா(கேப்டன்), சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஹர்சல் படேல், சஹால், ஹர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக்

First published:

Tags: Hardik Pandya, Ind vs SL