ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Sri Lanka T20: இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்... இலங்கை வெற்றிபெற 163 ரன்கள் இலக்கு

India vs Sri Lanka T20: இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்... இலங்கை வெற்றிபெற 163 ரன்கள் இலக்கு

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

29 பந்துகளை எதிர்கொண்ட இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 37 ரன்களை எடுத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்துள்ளது. பலமான பேட்டிங் வரிசை இருந்தும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகினர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில், தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். 10 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் 7 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால் 46 ரன்களுக்கு 3 விக்கெட் என இந்திய அணி தடுமாறிக் கொண்டு இருந்தது. இதையடுத்து இஷான் கிஷனுடன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணைந்து பொறுப்புடன் விளையாடினார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டிற்கு 31 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தது.

29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஹசரங்கா பந்துவீச்சில் தனஞ்ஜெய டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறனார். விக்கெட்டை காப்பாற்ற விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 14.1 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட் என இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது.  இதையடுத்து இணைந்த பேட்ஸ்மேன் தீபக் ஹூடா மற்றும் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடி ஹூடா 23 பந்துகளில் 4 சிக்சர் 1 பவுண்டரியுடன் 41 ரன்களை சேர்த்தார். அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் செய்த அக்சர் படேல் 20 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார்.

மீண்டும் அணிக்கு திரும்புகிறார் பும்ரா… இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சேர்ப்பு

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை இந்தியா எடுத்தது. இருவரும் சேர்ந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர்வார் என தகவல்

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில், தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் ஆட்டத்தால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியுள்ளது.

First published:

Tags: Cricket