இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசிப் பந்து வரையில் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில், தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
சூர்யகுமார் 7 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஹசரங்கா பந்துவீச்சில் தனஞ்ஜெய டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறனார். விக்கெட்டை காப்பாற்ற விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் 14.1 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட் என இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது. இதையடுத்து இணைந்த பேட்ஸ்மேன் தீபக் ஹூடா மற்றும் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடி ஹூடா 23 பந்துகளில் 4 சிக்சர் 1 பவுண்டரியுடன் 41 ரன்களை சேர்த்தார். அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் செய்த அக்சர் படேல் 20 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை இந்தியா எடுத்தது. இருவரும் சேர்ந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். விக்கெட் கீப்பர் குசால் மென்டிஸ் மட்டுமே தொடக்கத்தில் ஓரளவு விளையாடினார். 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த அவர் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மற்ற வீரர்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் தசுன் ஷனகா கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி, ஆட்டத்தை இலங்கையின் கட்டுப்பாட்டில் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிக்பேஷ் லீக்கில் மன்கட் செய்த ஆடம் ஸாம்பா… அவுட் தராத நடுவர்கள்… என்ன காரணம் தெரியுமா?
27 பந்துகளை சந்தித்த ஷனகா 3 சிக்சர் 3 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் வேகத்தில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சமிகா கருணாரத்னே 2 சிக்சர்களை விளாசி மீண்டும் ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பினார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket