ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

India vs Sri Lanka T20: இலங்கைக்கு எதிரான முதல் டி20… இந்திய அணி முதலில் பேட்டிங்

India vs Sri Lanka T20: இலங்கைக்கு எதிரான முதல் டி20… இந்திய அணி முதலில் பேட்டிங்

India vs Sri Lanka T20

India vs Sri Lanka T20

இந்த போட்டியின் மூலம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் பவுலர் ஷிவம் மாவி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியின் மூலம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் பவுலர் ஷிவம் மாவி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆகின்றனர்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும்  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த உள்ளது.

அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார்படுத்தும் விதமாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம்வீரர்களை பிசிசிஐ தயார்படுத்தி வருகிறது.

டி20 போட்டிகளில் திறமையாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

விராட் - ரோஹித் ஒரு போதும் உலகக் கோப்பையை வெல்ல முடியாது - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஓபன் டாக்

இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஷிவம் மாவி களத்தில் இறங்கியுள்ளார்.

இந்தியா ஆடும் லெவன் அணி -

இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்

மீண்டும் ஐபிஎல் அணிக்கு திரும்புகிறாரா சவுரவ் கங்குலி? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

இலங்கை ஆடும் லெவன் அணி - 

பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜிதா, டில்ஷான் மதுஷங்கா

First published:

Tags: Cricket