ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தண்டமான இலங்கை அணியின் ஆல்ரவுண்ட் தோல்வி- பெருமைப்படக் கூடிய வெற்றியா?

தண்டமான இலங்கை அணியின் ஆல்ரவுண்ட் தோல்வி- பெருமைப்படக் கூடிய வெற்றியா?

இந்தியா வெற்றி.

இந்தியா வெற்றி.

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளுடன் ஆட பேசாமல் இந்திய பி அணியை இறக்கிப் பார்க்கலாம். இதில் ஆடி, பந்து வீசி தங்கள் ஆவரேஜ்களை சிறப்பாக்கிக் கொள்ள உதவுமே தவிர இந்தத் தொடர்களில் வெல்வது பெருமைப்படத் தக்கதுதானா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரை சதம் விளாசி இலங்கையின் தண்ட பவுலிங்கையும் பீல்டிங்கையும் முறியடித்து, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20I தொடரில் சிறிது நேரம் ஒளிர்ந்த பிறகு, வியாழன் அன்று கிஷன் பேயாட்டம் ஆடினார். ஒரு கட்டத்தில் அவர் சதம் எடுப்பார் என்று ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் ஆட்டமிழந்தார்.

  56 பந்தில் 89 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் அய்யர் 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசி சூரியகுமார் இல்லாத பினிஷிங் டச் குறையைப் போக்கினார். இந்தியா 199/2 என்று குவிக்க, இலங்கை 137/6 என்று முடிந்தது. இஷான் கிஷன் 43 ரன்களில் இருந்த போது லியனாகே கேட்சையும் விட்டார்.

  பேட்டிங்கிலும் படுதண்டமாக இருந்த இலங்கை எந்த வித முயற்சியும் செய்யாமல் 10 ஓவர்களில் 57/4 என்று இருந்தனர். பிட்சும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை, புவனேஷ்வர் குமார் பந்து மட்டைக்கு அடியில் ஷூட் ஆகி நிசாங்கா மட்டையில் பட்டு பவுல்டு ஆகக் காரணமானது. ரோஹித் சர்மாவும் இப்படி ஷூட் ஆன பந்தில்தான் அவுட் ஆனார். அதுவும் புதிய பந்து, வேகமில்லா வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசுகிறார், பந்து மருந்துக்குக் கூட எழும்பவில்லை எனில் என்ன அர்த்தம்? இந்த மாதிரி பிட்ச்களில் ஆடித்தான், பவுன்ஸ் பிட்ச்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையை வெல்லப்போகிறோமா?

  கமில் மிஷாரா பொறுப்பற்ற முறையில் புவனேஷ்வர் குமாரின் ஒன்றுமில்லாத பந்தில் ஆட்டமிழந்து போனார். லியனாகே வெங்கடேஷ் அய்யரின் ஆஃப் கட்டரில் தமாஷாக ஆட்டமிழந்தார். லீடிங் எட்ஜில் கவரில் கேட்ச். தினேஷ் சந்திமால் 10 ரன்களில் ஜடேஜாவின் பந்தை மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆனார், எந்த இலங்கை வீரரிடமும் கேரக்டர் இல்லை. சரித் அசலங்கா நன்றாக ஆடி 47 பந்துகளில் 53 எடுத்தார், இவரைச்சொல்லி பயனில்லை, ஒருமுனையில் தண்டமாக ஆட்டமிழக்கும்போது தன் முனையை இறுகப் பிடிக்க நினைப்பது இயல்புதானே.

  ஸ்ரேயஸ் அய்யர்

  கடைசியில் சமிகா கருணரத்னே 2 சிக்சர்களுடன் 21 ரன்களையும், துஷ்மந்த சமீரா 14 பந்தில் 24 அடித்தனர், இனி வெற்றி பெறவே வாய்ப்பில்லை என்ற பிறகு வந்த இன்னிங்ஸ்கள் இதெல்லாம். வெங்கடேஷ் அய்யர் 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் இந்த இலங்கை பேட்டிங்குக்கு எதிராக ஓவருக்கு 12 ரன் விகிதத்தில் 3 ஓவரில் 36 கொடுத்ததை மன்னிக்க முடியாது. தீபக் ஹூடாவும் 3 ஒவர் 24 என்று 8 ரன்கள் சென்றதும் கவனிக்கத்தக்கது, ரோஹித் சர்மா எப்படியிருந்தாலும் வெற்றி பெறுவோம் என்று 7 பவுலர்களை பயன்படுத்துகிறார் என்றால் இலங்கை என்ன மாதிரியான சிக்னலை அவருக்குக் கொடுத்திருக்கும்.

  நிசாங்காவை உருட்டி பவுல்டு செய்த புவனேஷ்வர்

  வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளுடன் ஆட பேசாமல் இந்திய பி அணியை இறக்கிப் பார்க்கலாம். இதில் ஆடி, பந்து வீசி தங்கள் ஆவரேஜ்களை சிறப்பாக்கிக் கொள்ள உதவுமே தவிர இந்தத் தொடர்களில் வெல்வது பெருமைப்படத் தக்கதுதானா என்ற கேள்வி எழுகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs srilanka, T20