INDvSA 2nd Test | இந்திய அணி அபார பந்துவீச்சு... 275 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா

INDvSA 2nd Test | இந்திய அணி அபார பந்துவீச்சு... 275 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா
INDvSA
  • Share this:
இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலியின் அதிரடியான இரட்டை சதத்தாால் இந்தியா 601 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 108 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 91 ரன்கள் விளாசியும் இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபடா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.


முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மாக்ராம் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் எலகர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா அணியின் முதல் 2 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் வீழ்த்தினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் திணறிய தென்னாப்பிரிக்கா அணி, ஷமியின் வேகத்தில் 3வது விக்கெட்டையும் இழந்தது. டெம்பா பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.



தென்னாப்பிரிக்கா அணி 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட்களை இழந்ததால் நைட் வாட்ச்மேனாக அன்ரிச் நார்ட்ஜே களமிறங்கி நிதனமாக ஆடினார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புடன் முடிந்தது.

டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட தொடங்கிய உடனே அன்ரிச் நார்ட்ஜே 3 ரன்னிலும் தியூனிஸ் டி ப்ரூயின் 30 ரன்னிலும் அவுட்டாகினர். தென்னாப்பிரிக்கா அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது. கேப்டன் டு பிளெசிஸ் - டி காக் ஜோடி சற்று பொறுமையுடன் விளைாடியது.

இந்த ஜோடியுமம் நீண்ட நேரம் நீடித்து விளையாடவில்லை. டி-காக் 31 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் சிக்கி அவுட்டானர். அரைசதம் அடித்து தென்னாப்பிரிக்கா ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்த கேப்டன் டு பிளெசிஸ் 64 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.



தென்னாப்பிரிக்கா அணியின் 8 விக்கெட்களை எளிதில் வீழ்த்திய இந்திய அணி 9வது விக்கெட்டிற்கு நீண்ட நேரம் காத்திருந்தது. கேஷவ் மகராஜ் மற்றும் பிலாண்டர் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் போராடினர். அதிரடியாக விளையாடிய மகராஜ் அரைசதம் அடித்தார்.

மகராஜ் இறுதியாக அஸ்வின் பந்துவீச்சில் 72 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இந்த ஜோடி 109 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு சற்று ஆறுதல் அளித்தது. அடுத்து ரபடாவை அஸ்வின் 2 ரன்னில் வெளியேற்ற தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் முகமது ஷமி 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Also Watch

First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading