தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதானாமாக விளையாடி வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஹனுமன் விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்று உள்ளார். இதேப்போன்று தென்னாப்பிரிக்கா அணியிலும் சுழற்பந்து வீச்சாளர் டேன் பைட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். ரோஹித் சர்மாவிற்கு இது 50வது டெஸ்ட் போட்டியாகும். முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்ததால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி 25 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மா அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
வேகப்பந்து வீச்சாளர் ராபடா பந்துவீச்சில் ரோஹித் 14 ரன்களில் வெளியேறினார். அவருக்கு அடுத்து களமிறங்கி புஜாரா - மயங்க் அகர்வால் நிதனமாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் புஜாரா 58 ரன்களில் அவுட்டாகினார். இந்திய அணியின் 2வது விக்கெட்டையும் ராபடா வெளியேற்றினார்.
That's Tea on Day 1 of the 2nd Test.
India lose the wicket of Pujara in the 2nd session. #TeamIndia 168/2 https://t.co/IMXND6rdxV #INDvSA pic.twitter.com/aDVKBcl6tQ
— BCCI (@BCCI) October 10, 2019
இந்திய அணி மதிய தேநீர் இடைவேளையின் போது 168 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. மயங்க் அகர்வால் 86 ரன்களுடனும் கேப்டன் கோலி ரன் வேட்டையை தொடங்காமல் களத்தில் உள்ளனர்.
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.