ராஞ்சியில் நடைப்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 10 ரன்னிலும் புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும் கேப்டன் கோலி 12 ரன்னில் அவுட்டாகினர். இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. ரோஹித் சர்மா - ரஹானே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
பொறுப்புடன் விளையாடி ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வத சதத்தை பதிவு செய்தார். அவருடன் கைகோர்த்த ரஹானே அரைசதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் திணறினர். 58வது ஓவரில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
A brilliant century for @ImRo45 as #TeamIndia head for Tea on Day 1 of the 3rd Test with 205/3 on the board.
How many runs will Rohit and Rahane add to the tally in the final session?
Updates - https://t.co/aHgpd1BT6z #INDvSA pic.twitter.com/4pmB70ZT8s
— BCCI (@BCCI) October 19, 2019
இந்திய அணி முதல் நாள் முடிவில் 224 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும் ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட்டையும் அன்ரிச் நார்ட்ஜே 1 விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர்.
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.