தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் இந்தியஅணி அதனை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது.
இந்த நிலையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவின் பார்ல் நகரில் இன்று தொடங்கியது. டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக், ஜேன்மன் மாலன் ஆகியோர் களத்தில் இறங்கினர். மாலன் 6 ரன்களில் வெளியேற சிறிது நேரம் ஆட்டம் காட்டிய குவின்டன் டி காக் 27 ரன்களில் வெளியேறினார்.
Also Read :
IPL 2022: கே.எல்.ராகுல், ஸ்டாய்னிஸ், பிஷ்னாய் - லக்னோ அணியில் ஒப்பந்தம்
அதன்பின்னர் களத்திற்கு வந்த மார்க்ரம் 4 ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் பவுமா மற்றும் வான் டர் டசன் ஜோடி மிகவும் பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 204 ரன்களை பார்ட்னர்ஷிப் செய்தது.
கேப்டன் பவுமா 143 பந்துகளில் 110 ரன்களை எடுத்தார் வான்டர் டசன் 96 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். இதனால் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை எடுத்திருந்தது.
297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை விரட்டி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் களத்தில் இறங்கினர். ராகுல் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின்னர் ஜேழடி சேர்ந்த கோலியும், தவானும் நிதானமாக விளையாடி ரன்கைள சேர்த்தனர். இந்த ஜேழடி 2வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது.
Also Read :
Ashes Party| ஆஷஸ் வெற்றிப் பார்ட்டியில் விடிய விடிய குடித்து ரகளை- போலீஸ் நுழைந்து வீரர்களை அனுப்பி வைத்ததால் பரபரப்பு
கோலி 51 ரன்களிலும், தவான் 79 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விறுவிறுவென நடையைக் கட்டினர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்க அணியின் வாண்டர் டஸன் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.