தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக் கூட்டணியில் ரபாடா, லுங்கி இங்கிடி, ஆலிவியர் இன்னும் 5-6 பேர் அணியில் இருக்கின்றனர். இதில் எப்படியும் இந்த 3 பேர் ஆடுவார்கள், நார்ட்யே காயம் காரணமாக ஆடவில்லை என்பது இந்தியாவுக்குப் பெரிய நன்மை. இந்திய அணியில் எதற்கெடுத்தாலும் லொட்டு வைத்து ஆடும் புஜாராவுக்கு பெரிய சவால் காத்திருக்கிறது.
புஜாரா பேட்டிங் உத்தி நிச்சயமாக சரியில்லை, மேலும் இயன் சாப்பல் கூறுவது போல் அங்கெல்லாம் ஷார்ட் பிட்ச் வீசினா. பவுன்சர் வீசினால் அது ஸ்கோரிங் வாய்ப்பாகப் பார்க்கப்படவேண்டும். ஸ்கோரிங் வாய்ப்பா அப்படீன்னா என்ன? என்று கேட்பவர் நம் புஜாரா. அங்கெல்லாம் போய் 117 பந்துகளில் 11 ரன்கள் அடிப்பதெல்லாம் எந்த விதத்திலும் பயன் தராது.
சேவாக் போல் 35-40 ரன்களை 40 பந்துகளில் விளாசி அவர்கள் பவுலிங் லைன் அண்ட் லெந்த்தை காலி செய்தால்தான் பின்னால் வரும் வீரர்களுக்கும் தைரியம் இருக்கும். இல்லையெனில் 100 ரன்களுக்குள் மடிய வேண்டியதோடு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் கடும் அழுத்தமே ஏற்படும். டீன் எல்கர் போன்ற ஒரு வீரர் இங்கு இல்லை, ரோகித் சர்மாவும் இல்லை.
விராட் கோலியின் பார்ம் சந்தேகமாக இருக்கிறது. பயிற்சியாளர் ராகுல் திராவிடே தென் ஆப்பிரிக்க பிட்ச்களில் திணறியவர்தான். அங்கு சச்சின் டெண்டுல்கர், சேவாக், லஷ்மண் போன்றவர்கள்தான் ஆட முடியும். எனவே இந்த முறை ரிஷப் பண்ட் நன்றாக ஆட வாய்ப்பிருக்கிறது. மயங்க் அகர்வால், ஷ்ரேயஸ் அய்யர் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் புஜாரா கூறியதாவது:
“தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாடும் வெளிநாட்டு அணிகளுக்கு அங்குள்ள ஆடுகளங்களில் வேகமும், பவுன்சும் இருக்கும், வேகப்பந்து வீச்சில் பந்து நன்கு ஸ்விங் ஆகி எகிறும் என்பது தெரியும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எப்போதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எங்களால் திறம்பட சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். போட்டிக்கு நன்றாக தயாராகி வருவதால், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு தென்ஆப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் உள்ளது.
அந்த அனுபவம் உதவிகரமாக இருக்கும். பெரும்பாலான அணிகள் தங்கள் நாட்டில் உள்ளூர் சூழலில் சிறப்பாக விளையாடும். தென்ஆப்பிரிக்காவும் அதில் விதிவிலக்கல்ல. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு வரிசையை கொண்டுள்ள அணிகளில் தென்ஆப்பிரிக்காவும் ஒன்று.
நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடினோம். அது வெளிநாட்டு மண்ணில் எங்களால் வெற்றி வாகை சூட முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்துள்ளது. அத்துடன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை பார்க்கும் போது, தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் திறமை எங்களிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார் புஜாரா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheteshwar Pujara