தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அதிசயமாக வாய்ப்பு கிடைத்த இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் அது புஜாராவும் ரகானேவும்தான். ஏனெனில் இவர்களை தூக்குவதற்கு கோலிக்குத் தகுதியில்லாமல் இருப்பதே.
இவர்கள் இருவரையும் தூக்குமாறு சொதப்பி வரும் கோலி சொல்ல முடியாது, கோலி போய் அவர்களிடம் சொல்ல வேண்டும் ‘யூ ஆர் ட்ராப்டு’ என்று அப்படிச் சொல்லும் போது ஒரு விரல் இவர்களை நோக்கி எழும்போது 3 விரல்கள் கோலியை நோக்கி காட்டும் ‘நீங்கள் என்ன ஆடினீர்கள்?’ என்று மனசாட்சி கேட்கிறதோ இல்லையோ, ரகானே, புஜாரா கேட்பது போல் கோலிக்குத் தோன்றும்.
இந்நிலையில் முன்னாள் வீரரும் தற்போது பயிற்சியாளராகவும் செயல்பட்டு வரும் பிரவீண் ஆம்ரே புஜாராவுக்கு இதுவே கடைசி தொடராக அமையும், அதாவது அவர் சோபித்தால் நல்லது, இல்லையேல் வீட்டுக்கு என்கிறார் பிரவீண் ஆம்ரே.
இவர் தென் ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்காவின் ஆகச்சிறந்த பவுலிங்குக்கு எதிராக சதம் எடுத்தவர். அவர் கூறுவதாவது: “செடேஷ்வர் புஜாராவுக்கு நிச்சயம் அணி நிர்வாகத்திடமிருந்து மெசேஜ்கள் சென்றிருக்கும். நான் மீடியா செய்திகளில் இதைப் பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா 6589 ரன்கள் எடுத்துள்ளார். கடினமாக எடுத்த ரன்கள், சிலபல போட்டிகளை இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
அணிக்குத் தேவைப்படும்போது ரன்கள் எடுத்துக் கொடுத்திருக்கிறார் புஜாரா, இவரும் ரகானேவும் அணி சரியும் போது மீட்டுக் கொடுத்துள்ளனர், ஆகவே அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கலாம், ஆனால் நிச்சயமாக இந்தத் தொடருக்கு அவர்களுக்கு மெசேஜ் வந்திருக்கும். எனவே அவர்கள் நன்றாக ஆடினால்தான் நீடிக்க முடியும் என்று தெரிகிறது” என்கிறார் பிரவீண் ஆம்ரே.
ரிஷப் பண்ட் பற்றி...
ரிஷப் பண்ட் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர், ஆனால் சில வேளைகளில் ஆட்டமிழந்தால் அசிங்கமாக ஆட்டமிழக்கிறார். ஆனால் 3 டெஸ்ட் சதங்களை மூன்று வெவ்வேறு கண்டிஷன்களில் எடுத்துள்ளார் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியாவில் அவர் பிரமாதமாக ஆடினார். அவர் ஆடும் விதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
Also Read: கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி
டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் 20 விக்கெட்டுகளை இந்திய வீச்சாளர்கள் தொடர்ந்து வீழ்த்தி வருகின்றனர், தென் ஆப்பிரிக்காவிலும் இது நடக்கும் என்று கருதுகிறேன் என்றார் பிரவீண் ஆம்ரே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, Cheteshwar Pujara