Home /News /sports /

கோலி, புஜாரா செய்ய முடியாததைச் செய்த பும்ரா - தரமான சம்பவம்

கோலி, புஜாரா செய்ய முடியாததைச் செய்த பும்ரா - தரமான சம்பவம்

பும்ரா

பும்ரா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வாண்டரர்சில் நடைபெற்று வருகிறது, இதில் தென் ஆப்பிரிக்கா அணி சற்று முன் வரை 2ம் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்துள்ளது, ஆனால் இந்த தரமான சம்பவம் நேற்று, முதல் நாள் ஆட்டத்தில் நடந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வாண்டரர்சில் நடைபெற்று வருகிறது, இதில் தென் ஆப்பிரிக்கா அணி சற்று முன் வரை 2ம் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்துள்ளது, ஆனால் இந்த தரமான சம்பவம் நேற்று, முதல் நாள் ஆட்டத்தில் நடந்தது.

    ஆட்டத்தின் 60வது ஓவரில் முகமட் ஷமி 9 ரன்களில் ரபாடா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறியதும் பும்ரா இறங்கினார். வந்து நின்றவுடனேயே ரபாடா படம் எடுக்கும் பாம்புபோல் ஒரு பந்தை வீச பும்ரா தலையை ஒதுக்கிக் கொள்ள நேரிட்டது. அந்த 3 பந்தையும் ஒரு வழியாக ஒப்பேத்தினார் பும்ரா.

    61வது ஓவரில் இடது கை ஸ்விங் பவுலர் யான்சென் வீசினார், அஸ்வின் கவரில் தூக்கி அடித்து பவுமாவினால் கேட்ச் பிடிக்க முடியவில்லை, ஆனால் அடுத்த பந்தே ஷார்ட் பிட்ச் பந்து எகிற பாயிண்டில் கேட்ச் கொடுத்து அஸ்வின் 50 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது ஒரு பிரமாதமான இன்னிங்ஸ்.

    ஆனால் தரமான சம்பவம் அஸ்வின் அவுட் ஆன பிறகு ரபாடா வீசிய போதுதான் நடந்தது. 9 விக்கெட் போய் விட்டது சிராஜ் இறங்கினார். 187/9 என்ற நிலையில் ரபாடா வீசினார். ரபாடா வீச பும்ரா ஒதுங்கினார் பந்தும் அவரை நோக்கி வந்தது, ஆனால் அருமையாக பிளிக் ஆடி ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு விரட்டினார் பும்ரா 4 ரன்கள்.



    அடுத்த பந்தும் ஒதுங்கி சுற்றப்பார்த்தார் மாட்டவில்லை. அதற்கு அடுத்த பந்துதான் அந்த தரமான சம்பவம் நடந்தது. ஸ்டம்பில் உடலுக்கு நேராக தோள்பட்டை உயரத்த்துக்கு ஒரு பவுன்சரி போட்டார் ரபாடா. பும்ரா முகத்தை திருப்பியபடி மட்டையை பந்தின் மீது விட்டு ஹூக் ஷாட் ஆடினார் பந்து டாப் எட்ஜ் ஆகி ஃபைன் லெக் பீல்டர் பந்தை பார்க்க பார்க்க கீழேயே இறங்கவில்லை. எங்கேயோ போய் விழுந்தது, சிக்சர். பும்ரா சிக்சர் வீடியோ இதோ:



    அதே ஓவரில் ரபாடாவின் இன்னொரு யார்க்கர் முயற்சியையும் பும்ரா பவுண்டரிக்கு விரட்டினார். ஆக 2 பவுண்டரி 1 சிக்ஸ் என்று பும்ரா 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

    இதில் வேடிக்கை என்னவெனில் தென் ஆப்பிரிக்காவில் புஜாரா சிக்சர் அடித்ததில்லை கம்பீர் அடித்ததில்லை கோலி அடித்ததில்லை, ஆனால் நம் பும்ரா அதுவும் ரபாடாவை ஒரு சிக்சர் விளாசினார் என்றால் அது தரமான சம்பவம்தானே!!
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Jasprit bumrah

    அடுத்த செய்தி