ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென் ஆப்பிரிக்கா போட்டுக்கொடுத்த ‘தண்ட’பவுலிங்- சதமடித்த ராகுல்- இந்தியா ஆதிக்கம்

தென் ஆப்பிரிக்கா போட்டுக்கொடுத்த ‘தண்ட’பவுலிங்- சதமடித்த ராகுல்- இந்தியா ஆதிக்கம்

ராகுல்

ராகுல்

மொத்தத்தில் இந்த தென் ஆப்பிரிக்கா அணியை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதையும் விட பார்மில் இல்லாத, டீமை விட்டுத் தூக்க வேண்டிய வீரர்களெல்லாம் பார்முக்கு வர நல்ல சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது, ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணி நல்ல தலைமையில்லாமல் திக்கு திசையின்றி இருக்கிறது அதனால் பேட்டிங் பிட்சைப் போட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது, தண்ட பிட்சில் தென் ஆப்பிரிக்கா படு தண்டமாக பந்து வீசியதில் ராகுல் இரண்டு லைஃப்களுடன் சதமெடுத்தார், இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட நேர முடிவில் கே.எல்.ராகுல் 17 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 122 ரன்களுடனும் ரகானே 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். முன்னதாக மாயங்க் அகர்வால் தென் ஆப்பிரிக்காவின் தண்ட பவுலிங்கை பயன்படுத்தி 60 ரன்களைத் தேற்றிக் கொண்டார். இந்த தண்ட பவுலிங்கையும் பயன்படுத்தாமல் புஜாரா இன்சைடு எட்ஜில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

விராட் கோலி தன் ஸ்டான்ஸை மாற்றிக் கொண்டு சைட் ஆன் ஆக நின்று பந்தை இரண்டு கண்களாலும் பார்க்குமாறு நின்று கொண்டு ஒரு திராவிட் ரக இன்னிங்ஸை ஆடி தன்னம்பிக்கையுடன் ஆடி 35 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் மீண்டும் பழைய பூதம் தலைக்காட்ட வைடாக சென்ற பந்தை அசிங்கமாக ரீச் செய்து தொட்டார் ஸ்லிப்பில் முல்டரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இந்திய பேட்டிங் சரளமாக இல்லை. தீர்மானமின்மையுடன் ஆடினர், ஆனால் அதைப் பயன்படுத்தி சாய்க்கும் ஊடுருவும் பந்து வீச்சு தென் ஆப்பிரிக்காவிடம் இல்லை. டுவான் ஆலிவர் என்ற அந்த பவுலரை உட்கார வைத்து மார்க்கோ ஜேன்சன் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளரிடம் கொடுக்க அவர் நம்மூர் மொகீந்தர் அமர்நாத் போல் ஆடி அசைந்து வந்து போடுவதற்குள் ஒரு பந்தை 3 முறை ஆடிவிடலாம் போல் இருந்தது.

பேட்டிங் பிட்ச் போட்டதற்குக் காரணம் இந்திய வேகப்பந்து வீச்சின் செல்வாக்கிற்குப் பயந்துதான், வலுவான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்டிங் வரிசையையே சீப்பாக காலி செய்த பும்ரா, ஷமி, சிராஜ் கூட்டணிக்கு பயந்து பேட்டிங் பிட்சைப் போட்டனர். அதன் பலன் இந்தியாவுக்குச் சாதகம். ராகுலுக்கு டி காக் ஒரு கேட்சையும் மார்க்கோ ஜேன்சன் டீப்பில் ஒரு கேட்சையும் விட்டனர். அதை நன்றாகப் பயன்படுத்தினார் ராகுல். டீன் எல்கரின் களவியூகம் படுமோசமாக இருந்தது, எளிதான சிங்கிள்களை வாரி வழங்கும் இடைவெளிகளை அவர் உருவாக்கி வைத்திருந்தார்.

ஜேன்சன் முதல் ஓவரிலேயே அல்வா ஹாஃப் வாலிகளைப் போட்டு 3 பவுண்டரிகளை கொடுத்தார். உணவு இடைவேளைக்குப் பிறகுதான் இந்தப் பிட்சில் எப்படி வீச வேண்டும் என்பது தெரிந்து லுங்கி இங்கிடி வீசினார், அடுத்தடுத்த பந்துகளில் மயங்க் அகர்வாலை பவுல்டும், புஜாராவை பேட்-பேடு எட்ஜிலும் காலி செய்தார்.

விராட் கோலி ஸ்டான்ஸை மாற்றியதால் ஆஃப் வாலி பந்துகளை இடைவெளியில் அடிக்கச் சிரமப்பட்டு கையில் கையில் அடித்துக் கொண்டிருந்தார், ஆனால் நல்ல டச்சில் இருந்தார்.

ராகுல் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 90-ஐ எட்டினார், ஆனால் அதன் பிறகு சதத்துக்காக பம்மி சிங்கிளாக எடுத்து சதம் கண்டார். 90 களிலிருந்து 12 ஓவர்கள் எடுத்துக் கொண்டார் சதத்துக்கு 6வது வெளிநாட்டு சதமாகும் இது. ரகானேவுக்கு இறங்கியவுடன் நல்ல ஃப்ரீ கிஃப்ட்களாக பந்துகள் வர 6 பவுண்டரிகளை அடித்தார். பிறகு 8 பவுண்டரியாக அது மாறியது, இதில் ஒரு ஷாட் ரபாடாவை அடித்த புல் ஷாட், மற்றபடி எல்லாம் இலவச பவுண்டரி பந்துகள்.

மொத்தத்தில் இந்த தென் ஆப்பிரிக்கா அணியை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதையும் விட பார்மில் இல்லாத, டீமை விட்டுத் தூக்க வேண்டிய வீரர்களெல்லாம் பார்முக்கு வர நல்ல சந்தர்ப்பமும் கிடைத்துள்ளது, ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணி நல்ல தலைமையில்லாமல் திக்கு திசையின்றி இருக்கிறது அதனால் பேட்டிங் பிட்சைப் போட்டுள்ளது.

Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, India vs South Africa, Kl rahul