Home /News /sports /

Virat Kohli: தீபக் சாஹருக்கு உள்ள ‘கமிட்மெண்ட்’ கோலியிடம் இல்லை- அதிகாரமிழந்ததால் ஆர்வமிழந்தார்?

Virat Kohli: தீபக் சாஹருக்கு உள்ள ‘கமிட்மெண்ட்’ கோலியிடம் இல்லை- அதிகாரமிழந்ததால் ஆர்வமிழந்தார்?

கோலியின் கமிட்மெண்ட் இல்லாத ஆட்டம்

கோலியின் கமிட்மெண்ட் இல்லாத ஆட்டம்

விராட் கோலி, தேவைப்பட்டால் இடைவெளி விட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டு உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர்களில் ஆடி பார்மையும் ஆர்வத்தையும் மீட்டெடுக்கலாம். ஏனெனில் அவர் வேகப்பந்து, ஸ்விங், ஸ்பின் என்று எல்லாரிடமும் அவுட் ஆகத் தொடங்கி விட்டார்.

மேலும் படிக்கவும் ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்று ஒயிட்வாஷ் தோல்வி கண்டது, சமீபத்தில் இப்படிப்பட்ட ஒரு தோல்வியை இந்தியா கண்டதில்லை, இந்தத் தொடரில் விராட் கோலியின் ஆட்டம் ஒரு ‘யார் தோத்தா, யார் ஜெயிச்சா எனக்கென்ன’ என்பது போன்ற பாடி லாங்குவேஜுடன் காணப்பட்டது.

முன்பெல்லாம் 300, 330 ரன்களை ஏன் 350 ரன்களையெல்லாம் அலட்சியமாக சேஸ் செய்த விராட் கோலியின் பாடி லாங்குவேஜ் நமக்குத் தெரியும் இப்போது பல் பிடுங்கப்பட்ட விராட் கோலி, ரவிசாஸ்திரியின் கீழ் வானளாவிய அதிகாரம் படைத்து டீமில் தன்னைத் தவிர வேறு யாரும் செட்டில் ஆகவிடாமல் செய்து விட்டார். கங்குலி, கும்ப்ளே கேப்டன்சியை விட்டு போகும் போது தோனிக்கு நல்ல அணியை விட்டுச் சென்றனர், தோனியும் நல்ல ஸ்திரமான ஒரு அணியை விட்டுச் சென்றார், ஆனால் கோலி கேப்டன்சியில் ஒரு 4-5 ஸ்திரமான பேட்டர்கள் இல்லை. பவுலர்களால் வென்றார். கோலியின் கேப்டன்சியில் பெற்ற வெற்றி பவுலிங்கினால்தான்.

கோலி ஆட்டமிழந்து செல்கிறார்.


இந்நிலையில் அவர் முதல் ஒரு நாள் போட்டியில் அடித்த அரைசதமும் சொரத்தில்லாத அரைசதம், நேற்று அடித்த அரைசதமும் வெற்றியை நோக்கிச் செலுத்தப் பயனளிக்கவில்லை, காரணம் அவர் நிற்கவில்லை, தான் கேப்டனாக இருந்தால் நின்று வெற்றி பெறச் செய்திருப்பார். ஆனால் அதிகாரமிழந்ததால் ஆர்வமிழந்தார் விராட் கோலி, சில ஷாட்கள் அவுட் ஆவதற்காகவே ஆடுவது போல் இருந்தது. சுவாரசியமில்லாமல் யார் தோத்தா என்ன, ஜெயிச்சா என்ன என்பது போல் அவரது உடல்மொழி இருந்ததை நாம் பார்த்திருக்கலாம்.

Also Read: கிலி கொடுத்த சாஹர்: இந்தியாவுக்கு 3-0 ‘ஒயிட்வாஷ்’ தோல்வி- தென் ஆப்பிரிக்கா அபாரம்

தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் போன்ற பின் வரிசை வீரர்களிடம் இருக்கும் கமிட்மெண்ட் கூட கோலியிடம் இல்லாமல் போனதற்குக் காரணம் அவர் அதிகாரம்தான் ஆட்டம் என்று நினைக்கும் மனநிலையே. கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக அவர் ஆடியிருந்தால் இந்தப் பிரச்சனைகள் இல்லை, கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடனும் நட்புணர்வுடனும் ஆடுவதுதான் ஆட்டத்திறனை வளர்க்கும்.

நிறைய பேர் இப்படி ஆகியிருப்பதை கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். பல் பிடுங்கப்பட்டவுடன் ஆர்வமற்று ஆடி தன் இடத்தைத் தக்கவைக்க அரைசதம் அடித்து விட்டுச் சென்று விடுவார்கள், அதாவது, ‘அவர் என்ன செய்வார் பாவம், அவர் அந்த 69 ரன்களை எடுக்கவில்லை என்றால் இந்தியா இன்னும் முன்னமேயே காலியாகியிருக்கும்’ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்குமாறு ஆடுவார்கள். ஆனால் கோலியின் ஆர்வமின்மை பட்டவர்த்தனமாக தெரிகிறது.

இந்தியாவில் அஜய் ஜடேஜா என்ற ஒருவர் இருந்தார் அவர் ஒரு கட்டத்தில் இந்த மாதிரி அரைசதங்களுடன் அணியில் ஒட்டிக்கொண்டிருந்தார், கேப்டன் அசாருதீன் இப்படி ஆனதையும் பார்த்திருக்கிறோம். தோனி இப்படி ஆர்வமற்று பல போட்டிகளை ஆடி அணியில் தக்கவைத்துக் கொள்ளும் உத்தியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இப்படி அணியில் ஒட்டிக்கொள்பவர்கள் நீடிக்க முடியவில்லை, அடுத்தடுத்து பிரமாதமாக யுவராஜ், ரெய்னா, இர்பான் பதான், முகமது கைஃப் என்று வந்த பிறகு இப்படிப்பட்டவர்கள் உருவாக இடமில்லை.

ஆகவே விராட் கோலி, தேவைப்பட்டால் இடைவெளி விட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டு உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர்களில் ஆடி பார்மையும் ஆர்வத்தையும் மீட்டெடுக்கலாம். ஏனெனில் அவர் வேகப்பந்து, ஸ்விங், ஸ்பின் என்று எல்லாரிடமும் அவுட் ஆகத் தொடங்கி விட்டார்.

மேலும் மனத்தளவில் அவரது தற்போதைய நிலை கிரிக்கெட் ஆட உகந்ததாக இல்லை. எனவே விராட் கோலிக்கு இடைவேளை தேவை. மீண்டும் பழைய கோலியை பார்க்க முடியாவிட்டாலும் அணிக்குப் பங்களிப்புச் செய்யவும், தன்னை ஒரு கிரேட் பிளேயராக நிலை நிறுத்தவும், அவரது அனுபவமும் இந்திய கிரிக்கெட்டுக்குத் தேவை.
Published by:Muthukumar
First published:

Tags: India vs South Africa, Virat Kohli

அடுத்த செய்தி