Home /News /sports /

நான் இல்லாம தோத்தாச்சு அதுபோதும், அடுத்த டெஸ்ட்டுக்கு வந்துருவேன்- விராட் கோலி மைண்ட் வாய்ஸ்

நான் இல்லாம தோத்தாச்சு அதுபோதும், அடுத்த டெஸ்ட்டுக்கு வந்துருவேன்- விராட் கோலி மைண்ட் வாய்ஸ்

கோலி

கோலி

பேட்டர்களில் ஓவர்சீஸில் ஆடுவதற்கு ஒரு ஹனுமா விகாரி என்றால் லோக்கல் குழிப்பிட்ச்களில் வேகப்பந்து வீச ஒரு உமேஷ் யாதவ். இத்தகைய போக்குகளையெல்லாம் உடைக்கப்ப் போவது யார்?

    “முதுகுத் தசைப்பிடிப்பு” என்ற காரணத்தினால் (?) 2வது டெஸ்ட் போட்டியில் ஆடாத ரெகுலர் கேப்டன் விராட் கோலி கேப்டவுனில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றது, தான் இல்லாமல் தோற்க வேண்டும், மீண்டும் தான் வந்து ஜெயித்தால்தானே வர்த்தக மதிப்பும் ஆளுமை மதிப்பும் கூடும், இதனால் விராட் கோலி திரும்புகிறார். விராட் கோலி அடுத்த டெஸ்ட் போட்டிக்கு வருவது குறித்து பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, “விராட் ஏற்கெனவே தன் உடல்நிலை குறித்து நன்றாக உணர்கிறார்” என்று அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கோலி வருவார் என்பதை சூசகமாகத் தெரிவித்தார்,

    உண்மையிலேயே காயமடைந்த சிராஜ் அடுத்த டெஸ்ட் போட்டிக்குச் சந்தேகம். தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிடும் சூசகமாக, “அனைத்து விதங்களிலும் அவர் ரெடிதான் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஓடி சோதனை செய்து பார்த்தார். நெட்டில் சிலபல த்ரோடவுன்களை அவருக்குச் செய்து பேட்டிங் செய்ய முடிகிறதா என்று பார்க்க வேண்டும். எனவே சிலபல வலைப்பயிற்சி அமர்வுகளுக்குப் பின் கோலி சரியாகிவிடுவார்.

    நான் இன்னும் உடற்கோப்பு மருத்துவரிடம் இது குறித்து பேசவில்லை. ஆனால் கோலியுடன் பேசிய வரையில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது, இன்னும் 4 நாட்கள் இருக்கிறதே அதற்குள் தேறி விடுவார்” என்றார் ராகுல் திராவிட்.

    ஆகவே கோலி வருகிறார் என்றால் சொத்தை பேட்டர் புஜாராவோ, சொதப்பல் ரகானேவோ வெளியேற மாட்டார்கள், பதிலாக ஓரளவுக்கு பொறுப்பாக ஆடிய விஹாரிதான் வழி விட வேண்டும், ஷ்ரேயஸ் அய்யர் வானத்தைப் போல மனம் படச்ச மன்னவனேன்னு உட்கார வேண்டியதுதான்.

    ராகுல் திராவிட் ஷ்ரேயஸ் பற்றி பேசுகையில், ‘வாய்ப்பு கிடைக்கும் போது விளையாடும் பெரிய மனது அவர்களுக்கு வேண்டும்’என்றார். சீனியர் வீரர்களை இப்போதைக்கு ஆதரிப்பதுதான் நல்லது என்று புஜாரா, ரகானேவுக்கு முட்டுக் கொடுக்கிறார் திராவிட்.

    Also Read: IND vs SA| கடுமையா சொல்லணும்னா முதல் இன்னிங்ஸ் சொதப்பல்தான் காரணம்- தோல்வி குறித்து திராவிட்

    ஜனவரி 11ம் தேதி நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் சிக்கல் உள்ளது, யாரை உட்கார வைப்பது என்பதில். சிராஜுக்குப் பதில் நிச்சயம் இவர்கள் இஷாந்த் சர்மாவை எடுத்து உமேஷ் யாதவ் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்கள். பேட்டர்களில் ஓவர்சீஸில் ஆடுவதற்கு ஒரு ஹனுமா விகாரி என்றால் லோக்கல் குழிப்பிட்ச்களில் வேகப்பந்து வீச ஒரு உமேஷ் யாதவ். இத்தகைய போக்குகளையெல்லாம் உடைக்கப்ப் போவது யார்?
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa

    அடுத்த செய்தி