Home /News /sports /

தென் ஆப்பிரிக்கா தொடர்: ரவி சாஸ்திரி, வாசிம் ஜாஃபர், மகாயா நிடினி ,மாறுபட்ட கருத்துகள்

தென் ஆப்பிரிக்கா தொடர்: ரவி சாஸ்திரி, வாசிம் ஜாஃபர், மகாயா நிடினி ,மாறுபட்ட கருத்துகள்

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

''தென் ஆப்ரிக்க அணி சும்மா தள்ளிவிடக்கூடிய அணி அல்ல, சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணி" என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ''தென் ஆப்ரிக்க அணி சும்மா தள்ளிவிடக்கூடிய அணி அல்ல, சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணி" என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இந்திய அணி கடந்த 1992ல் முதன் முதலில் தென் ஆப்ரிக்க மண்ணில் டர்பன் டெஸ்டில் பங்கேற்றது. அன்று முதல் இன்று வரை 20 டெஸ்டில் விளையாடிய இந்திய அணி, 2006, 2010, 2018 என மூன்று டெஸ்டில் மட்டும் வென்றது. தென் ஆப்ரிக்க அணி 10 டெஸ்டில் வெற்றி பெற்றது. மற்ற போட்டிகள் 'டிரா' ஆகின. இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவில் வென்றது இல்லை.

    இந்த முறை இந்திய அணிக்கு சவால் அளிக்கும் ‘கொலவெறி’ ஃபாஸ்ட் பவுலர் ஆன்ரிச் நார்ட்யே காயத்தினால் விலகியுள்ளது இந்திய அணிக்கும் கோலிக்கும் பெரிய நிம்மதியாகும்.

    தற்போது தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் செஞ்சுரியனில் உள்ள 'சூப்பர் ஸ்போர்ட் பார்க்' மைதானத்தில் டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டேயில் துவங்கவுள்ளது. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59, கூறியது:

    தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி இன்னும் ஒருமுறை கூட கோப்பை வென்றது இல்லை. இம்முறை இதற்கு சரியான நேரம் கிடைத்துள்ளது. இதைவிட சிறந்த நேரம் கிடைக்கப் போவதில்லை. கோலி சிறப்பான கேப்டன் என்பதோடு தாக்கம் ஏற்படுத்தும் கேப்டன், இவருக்கு சிறந்த வீரர்கள் அடங்கிய அணி கிடைத்துள்ளது.

    இருப்பினும் தென் ஆப்ரிக்க அணியினர் சொந்தமண்ணில் அவ்வளவு எளிதில் விட்டுத்தந்துவிட மாட்டர். ஆனால் நம்மிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணி தான் சாதிக்கும். இதை எப்போதும் சொல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில்,''தென் ஆப்ரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருப்பார். ஆனால் நமது பேட்டர்கள் முன்பு போல இல்லை. எப்படி இருப்பினும் இது சவாலான தொடராகத் தான் இருக்கும்,'' என்றார்.

    Also Read: சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர்களாயினர் லாரா, ஸ்டெயின், பதானி

    தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிடினி கூறுகையில்,'' இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. ஆனால் தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு சொந்தமண் பலம் குறித்து நன்கு தெரியும். இங்குள்ள ஆடுகளங்கள் குறித்து நன்றாகத் தெரியும் என்பதால், எங்கள் வீரர்கள் சாதிப்பர் என நம்புகிறேன்,'' என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa 2019, Ravi Shastri

    அடுத்த செய்தி