20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென்ஆப்பிரிக்க வீரர்கள் இன்று இந்தியா வருகின்றனர்.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதற்காக தென்ஆப்பிரிக்க வீரர்கள் இன்று டெல்லி வருகிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு மாதங்கள் இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடிய நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் களம் இறங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற ஒன்பதாம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
அடுத்தடுத்த போட்டிகள் கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு நகரங்களில் நடைபெறுகிறது. கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் இந்த தொடரில் ரசிகர்களுக்கு 100% அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரினால் இந்திய வீரர்கள் மிகவும் களைப்படைந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி அங்கு இந்திய அணியை டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் உதை வாங்கிய இந்திய அணியை பதம் பார்க்க வருகிறது தென் ஆப்பிரிக்கா அணி.
உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் இவர்கள் பந்துவீசுவதைப் பார்க்க ஆவலாக உள்ளது. யார்க்கர் நடராஜன் காயமடைந்ததால் வாய்ப்புப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
கே.எல்.ராகுல் தலைமை இந்திய அணி சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
போட்டி அட்டவணை: அனைத்துப் போட்டிகளும் இரவு 7 மணிக்குத் தொடங்கும்:
ஜூன் 9 முதல் போட்டி டெல்லி
ஜூன் 12 - 2வது போட்டி கட்டாக்
ஜூன் 14- 3வது டி20 வைசாக்
ஜூன் 17- 4வது டி20 ராஜ்கோட்
ஜூன் 19- 5வது டி20- பெங்களூரு
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.