ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs SA | இந்திய அணி பேட்டிங்.. தென்னாப்பிரிக்க அணியில் முக்கிய மாற்றம்

Ind vs SA | இந்திய அணி பேட்டிங்.. தென்னாப்பிரிக்க அணியில் முக்கிய மாற்றம்

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி

இந்திய அணியில் மாற்றம் இல்லாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Guwahati [Gauhati], India

  Ind vs SA | இந்திய அணி பேட்டிங்.. தென்னாப்பிரிக்க அணியில் முக்கிய மாற்றம்தென் ஆப்பிரிக்கா -இந்திய அணிக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

  இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேன 2வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது.

  இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் தேம்ம பவுமா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன் படி தென் ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிக்கீடி அணிக்கு திரும்பியுள்ளார்.

  இந்திய அணியில் மாற்றம் இல்லாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியுள்ளது.

  இந்திய அணி : கே.எல்.ராகுல், ரோகித் சர்மா( கேப்டன்) விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பாந்த், தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹார், அர்ஷிதீப் சிங்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs South Africa, T20