ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சரிவில் இருந்த இந்திய அணியை தனி ஒரு ஆளாக மீட்ட சூர்யகுமார் யாதவ்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 134 ரன்கள் இலக்கு

சரிவில் இருந்த இந்திய அணியை தனி ஒரு ஆளாக மீட்ட சூர்யகுமார் யாதவ்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 134 ரன்கள் இலக்கு

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

18.5 ஓவர் வரை போராடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 3சிக்சர், 6பவுண்டரிகள் என 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலககோப்பை சூப்பர் 12 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அபார ஆட்டத்தால் சரிவில் இருந்து இந்திய அணி மீண்டது.

    8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் குரூப் -2 ஆட்டத்தில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பெர்த்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் சொதப்பினர்.

    15 ரன்களில் கேப்டன் ரோகித் சர்மாவும் 9 ரன்களில் கே.எல்.ராகுலும் வெளியேறினர். அடுத்த வந்த விராட் கோலியும் நிகிடி பந்துவீச்சில் 12 ரன்களில் வெளியேறியதால் இந்திய அணி திணறி கொண்டிருந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ரன்களை தனி ஆளாக சூர்யகுமார் யாதவ் உயர்த்தினார்.

    இதையும் படிங்க: இறுதி ஓவரின் கடைசி பந்தில் வங்கதேச அணிக்கு காந்திருந்த பெரிய டிவிஸ்ட்: கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு ஜிம்பாப்வே தோல்வி!

    18.5 ஓவர் வரை போராடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 3சிக்சர், 6பவுண்டரிகள் என 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட்டை இழந்து 133 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி 4 விக்கெட்டும், பார்னல் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India vs South Africa, Suryakumar yadav, T20 World Cup