நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம், அரைசதம் என்று சாதனை புரிந்த மும்பை வீரர் ஷ்ரேயஸ் அய்யர், தென் ஆப்பிரிக்காவில் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும் என்று பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்தியாவில் தாதாவாக இருக்கலாம் ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ரபாடா, நார்ட்யே, லுங்கி இங்கிடி, ஆலிவியர் போன்ற பவுலர்கள் சாதாரணப்பட்டவர்கள் அல்ல, எனவே அங்கு சென்றால் ஷ்ரேயஸ் அய்யர் மட்டுமல்ல நம் கோலியே அடி வாங்காமல் இருப்பது கடினமே.
பிட்ச் அப்படிப்பட்ட கொடூரமான வேகப்பந்து பிட்ச். வங்கதேசம் ஒரு முறை செல்லும் போது நன்றாகச் சென்று வரும்போது ஆம்புலன்ஸ் விமானத்தில் வராத குறைதான்.
இந்த முறை இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டேயில் தொடங்குகிறது. இந்நிலையில் ஷ்ரேயஸ் அய்யர் பற்றி கங்குலி கூறும்போது, “முதல் தரக் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார். அதுவும் பல் ஆண்டுகளாகவே முதல் தர கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார் அய்யர்.
இது சாதாரண வீரரால் செய்ய முடியாதது. ஒரு கட்டத்தில் நம் திறமையை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் சென்று காட்ட வேண்டும். அவர் தன் முதல் டெஸ்ட்டில் அருமையாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவருக்கு உண்மையான டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்கள்தான் பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பும் பிட்ச்களில் தான் அவர் நிரூபிக்க வேண்டும். நிச்சயம் அவர் நிமிர்ந்து நின்று ஆடுவார் என்றே கருதுகிறேன்” என்றார் கங்குலி.
Also Read: கோலி -ரோகித் சர்மா இருவர் மீதும் தோனி அதிருப்தி அடைந்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shreyas Iyer