Home /News /sports /

ஷர்துல் தாகூர் அபாரம்... தென்னாப்பிரிக்காவை விட 58 ரன்கள் இந்தியா முன்னிலை

ஷர்துல் தாகூர் அபாரம்... தென்னாப்பிரிக்காவை விட 58 ரன்கள் இந்தியா முன்னிலை

ஷர்துல் தாகூரின் மிரட்டலான பந்து வீச்சால் 79.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களை எடுத்தது.

ஷர்துல் தாகூரின் மிரட்டலான பந்து வீச்சால் 79.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களை எடுத்தது.

ஷர்துல் தாகூரின் மிரட்டலான பந்து வீச்சால் 79.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களை எடுத்தது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரின் அபாரமான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணியை 202 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, 2-வது இன்னிங்சை தொடர்ந்து 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா தனது முதல் இன்னிங்சில் 202 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் கேப்டன் கே.எல்.ராகுலை தவிர்த்து மற்றவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் 50 ரன்களில் ஆட்டமிழக்க, ஆல்ரவுண்டர் அஷ்வின் தன் பங்கிற்கு 46 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

    Also Read : ஷர்துல் தாக்கூர் 3 விக். - தரையில் பட்டு பண்ட் எடுத்த கேட்சுக்கு அவுட்- தெ.ஆ. 102/4

    இதன்பின்னர் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின ஷர்துல் தாகூர் கேப்டன் எல்கார், கீகன் பீட்டர்சன், வான்டர் டசன், பவுமா, விக்கெட் கீப்பர் வெர்ரேன், மார்கோ ஜேன்சன், லுங்கி இங்கிடி ஆகிய 7 பேரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஷர்துல் தாகூரின் மிரட்டலான பந்து வீச்சால் 79.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே 8 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல். ராகுல் விக்கெட்டை இழந்தது. மயங்க் அகர்வால் 23 ரன்களில் வெளியேற, புஜாரா 35 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    Also Read : வெற்றியை நோக்கி புத்தெழுச்சி பெற்ற வங்கதேசம்- தோல்வியின் பிடியில் நியூசிலாந்து- 12 ஆண்டுகளில் இத்தனை ஓவர்களை வீசியதேயில்லை!

    நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி