Home /News /sports /

Bhuvneshwar Kumar: புவனேஷ்வர் குமார் மட்டும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால்..

Bhuvneshwar Kumar: புவனேஷ்வர் குமார் மட்டும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால்..

2018 தொடரில் எழுச்சி கண்ட நாயகர்கள் பும்ரா, பாண்டியா, புவனேஷ்வர் குமார்

2018 தொடரில் எழுச்சி கண்ட நாயகர்கள் பும்ரா, பாண்டியா, புவனேஷ்வர் குமார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
2018-ம் ஆண்டு ஜொகான்னஸ்பர்கில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் ஆடிய புவனேஷ்வர் குமார், இந்தியாவில் மனோஜ் பிரபாகர், பிரவீண் குமாருக்கு அடுத்தபடியான ஒரு மித வேக ஸ்விங் பவுலர் என்ற மட்டத்தில் மிகச்சிறந்த பவுலராகத் திகழ்ந்தார்.

21 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளைத்தான் அவர் வீழ்த்தியிருந்தாலும் எண்களைக் காட்டிலும் அவர் வெளிநாடுகளில் அபாயகரமான பவுலர்தான். 21 போட்டிகளில் 4 முறை 5 விக்கெட்டுகளையும் 3 முறை 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 50 விக்கெட்டுகள் குறைந்தது எடுத்த பவுலர்களுக்கு இது ஒரு அருமையான புள்ளிவிவரமே.

இவர் அனைத்து வடிவ பவுலர். ஆனால் காயத்தினால் இவர் பாதிக்கப்பட்டவர் இது ஒரு புறம் என்றால் விராட் கோலி (virat kohli) போன்ற அதீதங்களினால் இன்னும் பாதிக்கப்பட்டார், வேகம் வேண்டும் என்று இவரை பெர்ஃபார்ம் பண்ணினாலும் உட்கார வைத்தார் விராட் கோலி.

இந்த முறை இந்திய அணி செஞ்சூரியனில் வெற்றி பெற்று ஜொகான்னஸ்பர்கிலும், கேப்டவுனிலும் செம உதை வாங்கி தொடரை தென் ஆப்பிரிக்காவில் (India vs South Africa 2022 series)கோலி 1-2 என்று இழக்க நேரிட்டது, அவர் மட்டும் புவனேஷ்வர் குமாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால், நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் இருமுறை 4வது இன்னிங்ஸில் பவுலிங் சாதக ஆட்டக்களத்தில் தென் ஆப்பிரிக்கா இலக்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

தென் ஆப்பிரிக்க பிட்ச்களில் வேகம், ஆக்ரோஷம் தேவையில்லை, புவனேஷ்வர் போன்று லைன் அண்ட் லெந்தில் வீசி போதிய வேகம் இருந்தால் போதும் நிச்சயம் இவர் கீகன் பீட்டர்சனையோ, எல்கரையோ சடுதியில் வீழ்த்தியிருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.

இதனால்தான் முன்னாள் தொடக்க வீரரும் இப்போதைய கிரிக்கெட் கருத்தாளருமான ஆகாஷ் சோப்ரா, ஒருமுறை, “புவனேஷ்வர் குமார் மட்டும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால் 250 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பார்” என்றார்.

Also Read: Virat Kohli: கோலி இடத்துக்கெல்லாம் ரோகித் சர்மா வர முடியாது- கவாஸ்கர் கூறும் காரணம்

பேட்டிங்கிலும் தேவைப்படும்போது அவர் இப்போதைய ஷர்துல் தாக்கூர் போல் ஆக்ரோஷமாக ஆடாவிட்டாலும் பங்களிப்பு செய்வார். ஒரு பயனுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரரை ஓரங்கட்டிய பெருமை கோலி, ரவிசாஸ்திரி, பிசிசிஐ அணித்தேர்வுக்குழுவையே சாரும்.

இன்று கோலி பல்பிடுங்கப்பட்ட பாம்பாகி வெறுப்பில் கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார், ஆனால் இவர் புவனேஷ்வர் குமாருக்கும், குல்தீப் யாதவுக்கும் செய்த அநீதியை திரும்பப் பெற முடியுமா? இவர்கள் இழந்ததை அவரால் திருப்பிக் கொடுக்க முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
Published by:Muthukumar
First published:

Tags: Bhuvneshwar Kumar, India vs South Africa

அடுத்த செய்தி