INDvSA 3rd Test : 39,000 இருக்கைகள்... விற்றது 1,500 டிக்கெட்.. களையிழந்த ராஞ்சி டெஸ்ட்

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தோனி விளையாடிய போது ராஞ்சி மைதான அரங்கம் நிறைந்து இருந்தது.

INDvSA 3rd Test : 39,000 இருக்கைகள்... விற்றது 1,500 டிக்கெட்.. களையிழந்த ராஞ்சி டெஸ்ட்
ராஞ்சி மைதானம்
  • Share this:
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு இதுவரை 1500 டிக்கெட்கள் மட்டுமே விற்றுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் தொடங்க உள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் 3-வது டெஸ்டிலும் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளனர்.

39,000 இருக்கைகள் கொண்ட ராஞ்சி மைதானத்தில் 1500 டிக்கெட்கள் மட்டுமே விற்றுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்க்க நாளொன்று 200 முதல் 2000 ரூபாய் வரையிலான டிக்கெட்கள் விற்கப்படுகிறது. சீசன் டிக்கெட் 1000 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. தோனி இல்லாத டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ராஞ்சி மைதானத்தில் பாரக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.


டெஸ்ட் போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது ஓய்வை அறிவித்தார். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தோனி விளையாடிய போது அரங்கம் நிறைந்து இருந்தது.

ராஞ்சி டெஸ்ட் போட்டியை பார்க்க இந்திய ராணுவம், துணை ராணுவ படையினர், ஜார்கண்ட் போலீசார் என இவர்களை கவுரவிக்கும் வகையில் 5000 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

Also Watch

Loading...

First published: October 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...