தென்னாப்பிரிக்கா டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு! தோனி இடம்பெறவில்லை

வேகபந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Vijay R | news18india
Updated: August 29, 2019, 9:54 PM IST
தென்னாப்பிரிக்கா டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு! தோனி இடம்பெறவில்லை
வேகபந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Vijay R | news18india
Updated: August 29, 2019, 9:54 PM IST
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியில் இடம் பெறவில்லை.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 29ம் தேதி தர்மசாலாவில் தொடங்க உள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

வேகபந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.


உலக கோப்பை தொடருக்கு பின் மகேந்திர சிங் தோனி 2 மாதம் ராணுவப் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார். ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தேர்வாகவில்லை. அவருக்கு பதில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி : விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், கலீல் அஹமது, தீபக் சஹார், நவ்தீப் ஷைனி

Also Watch

Loading...

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...