ஜூன் 9ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். கடைசியாக இந்திய அணிக்கு 2019 உலகக்கோப்பையின் போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடினார், டி20யில் கடைசியாக இந்தியாவுக்கு ஆடியது 2019-ல் பிப்ரவரி 27ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் ஆடியதுதான்.
இந்திய அணியில் மொஹீந்தர் அமர்நாத்துக்கு அடுத்தபடியாக கம்பேக் கிங் என்றால் அது தினேஷ் கார்த்திக்தான். மொஹீந்தர் அமர்நாத் ஒழிக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாஃபருடன் இணைந்து இங்கிலாந்தில் டெஸ்ட்டில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால் உலகம் அதன் பிறகு இவரை மறந்து விட்டது, தோனி வந்தால் என்ன? இவருக்கான இடத்தை நினைத்திருந்தால் கொடுத்திருக்கலாம்.
இந்திய அணியில் கபில்தேவ் கேப்டன்சியில் 2 கீப்பர்கள் ஆடியுள்ளனர். சந்திரகாந்த் பண்ட்டிட் என்ற விக்கெட் கீப்பரை பேட்டிங்குக்காக அணியில் வைத்திருந்தார் கபில்தேவ். ஆனால் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் கரியர் 26 மேட்ச்களுடன் முடிந்தது, விட்டு விட்டு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளினால் 2004 முதல் 2018 வரை ஆடியுள்ளார் என்று காட்டினாலும் 2010க்குப் பிறகு திடீரென கோலி தலைமையில் இங்கிலாந்து சென்ற போது 2018-ல் அழைக்கின்றனர். அதுதான் டெஸ்ட் கடைசி தொடர். 8 ஆண்டுகள் அவரை ஒதுக்கி விட்டனர்.
இப்போது டி20 கிரிக்கெட் என்ற ஒன்று வந்தவுடன் தினேஷ் கார்த்திக் வாழ்வு புத்துயிர் பெற்றது, குறிப்பாக அபிஷேக் நாயருடன் அவர் பிராக்டீஸ் செய்து புதிய திறமைகளை வளர்த்துக் கொண்டு தன்னை தேர்வு செய்யும்படி அவர் தனது ஆட்டத்தின் மூலம் தேர்வுக்குழுவுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தினார்.
தன்னுடைய கம் பேக் பற்றி தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
இது எனது மிகவும் சிறப்பு வாய்ந்த மறுபிரவேசம், ஏனென்றால் நிறைய பேர் என்னை கைவிட்டுவிட்டனர். நான் திரும்பி வந்து நான் என்ன செய்தேனோ அதைச் செய்ய, பயிற்சி செய்ய பல சிறப்பான விஷயங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
பல விதங்களில் நான் ஆர்சிபிக்குக் கடமைப்பட்டுள்ளேன். அதாவது நான் என் திட்டங்களை செயல்படுத்த அவர்கள் கொடுத்த தெளிவு எனக்கு மிக மிக முக்கியமானது, இப்போது உண்மையில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
பல இளம் வீரர்கள் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர், நன்றாக ஆடுகின்றனர், தங்களை அணியில் எடுக்க பாடுபடுகின்றனர், அப்படியிருக்கும் போது என்னை அணிக்குத் தேவை என்றும் இவர் உலகக்கோப்பைக்கு வேண்டும் என்று நினைப்பது நான் சாதாரணமானவன் என்ற எண்ணத்தையே எனக்கு ஏற்படுத்துகிறது.
உலகக்கோப்பை என்பது இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் இருப்பதைக் காட்டுகிறது, இப்போதைக்கு என் திறமையை நிரூப்பிக்க வாய்ப்பு கிடைத்ததில் உண்மையில் மகிழ்ச்சி.
இவ்வாறு கூறினார் தினேஷ் கார்த்திக்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.