Home /News /sports /

அதை பற்றி மட்டும் நான் பேச மாட்டேன், என் சம்பளத்தை புடுங்கிடுவாங்க- மயங்க் அகர்வால்

அதை பற்றி மட்டும் நான் பேச மாட்டேன், என் சம்பளத்தை புடுங்கிடுவாங்க- மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் மயன்க் அகர்வால் 60 ரன்களை எடுத்து இங்கிடி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அது சர்ச்சைக்குரிய அவுட்டா என்ற கேள்விக்குத்தான் மயங்க் அகர்வால் இப்படி பதில் அளித்துள்ளார்.

    டாஸ் வென்ற விராட் கோலி பிளாட் பிட்சில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்காவில் திக்குத் திசையற்ற பவுலிங்கில் அகர்வால், ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்த்தனர், அப்போது அகர்வால் 60 ரன்களில் எல்.பி.ஆனார். அது முதலில் நாட் அவுட் என்று தெரிந்தாலும் ரிவியூவில் அவுட் என்று தெரிந்தது.

    பிட்சில் பெரிய ஸ்விங் இல்லாத போது மிடில் ஸ்டம்பிலிருந்து உள்ளே வந்த பந்து கிரீசுக்குள் டீப் ஆக இருக்கும் அகர்வாலின் பேடில் பட்டது. பெரிய அப்பீல் பிறகு எல்கர் ரிவியூ செய்தார் அது அவுட் என்று தீர்ப்பானது. மயன்க் அகர்வால் கடும் அதிருப்தியுடனேயே சென்று பெவிலியனிலும் அதிருப்தியுடன் காணப்பட்டார்.

    இந்த அவுட் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்ட போது, “நான் இந்த அவுட் தீர்ப்பு குறித்து கருத்து கூற அனுமதி கிடையாது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான். இல்லையெனில் நான் விதிமீறுபவனாவேன். என்னுடைய சம்பளமும் முடக்கப்படும்.” என்று முடித்து விட்டார்.

    ராகுலை விடவும் அகர்வால் சரளமாக ஆடினார். ராகுல் ஆட்ட நேர முடிவில் 122 ரன்களுடனும், ரகானே 40 ரன்களை விரைவிலும் எடுத்து களத்தில் இருக்கின்றனர். இன்று மழை காரணமாக ஆட்டம் தாமதமாகியுள்ளது.

    மயன்க் அகர்வால் எல்.பி.. ஆன அடுத்த பந்தே, ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் இன்சைடு எட்ஜ் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார் புஜாரா. இதுவும் இங்கிடியின் இன்ஸ்விங்கர், பிறகு கோலி நன்றாக ஆடிவந்த நிலையில் 35 ரன்களில் இங்கிடியின் வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்து அவுட் ஆனார்.

    Also Read: தென் ஆப்பிரிக்கா போட்டுக்கொடுத்த ‘தண்ட’பவுலிங்- சதமடித்த ராகுல்- இந்தியா ஆதிக்கம்

    முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 272/3 என்று வலுவாக இருந்தது. இன்று மழை முடிந்து தொடங்கினால் இந்திய அணி விரைவு கதியில் 380-400 ரன்களை எடுத்து பிறகு தென் ஆப்பிரிக்காவின் 2-3 விக்கெட்டுகளையாவது கைப்பற்றினால்தான் வெற்றிக்குச் செல்ல முடியும். பார்ப்போம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி