Home /News /sports /

கோலி மாதிரியே தேவையில்லாத ஷாட் ஆடி 7 விக்கெட்டுகளும் அவுட்

கோலி மாதிரியே தேவையில்லாத ஷாட் ஆடி 7 விக்கெட்டுகளும் அவுட்

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி தான் வைடு பந்தை துரத்தி ஆட்டமிழந்த விதம் குறித்து ஹோட்டலில் சென்று வருந்தியிருப்பார் என்கிறார் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் போலாக்.

    விராட் கோலி தான் வைடு பந்தை துரத்தி ஆட்டமிழந்த விதம் குறித்து ஹோட்டலில் சென்று வருந்தியிருப்பார் என்கிறார் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் போலாக். ஆனால் அதே போல்தான் இன்று தேவையில்லாத ஷாட்டில் ராகுல், ரகானே, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் என்று அனைவரும் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே செஞ்சூரியனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்திய அணி 327 ரன்களுக்கு சுருண்டு போக, தென் ஆப்பிரிக்காவும் 30/2 என்று திண்டாடி வருகிறது.

    நேற்று நடைபெறயிருந்த இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுத்தார்.

    அவரது இந்த மோசமான ஷாட் செலக்சன் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷான் போலாக் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :  “விராட் கோலி இந்த போட்டியில் ஆட்டமிழந்த விதம் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில் இந்த போட்டியில் அவர் நல்ல டச்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நிச்சயம் அவர் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தேன். அதுமட்டுமின்றி அவரது கால் நகர்வுகளும் பந்துக்கு ஏற்றாற்போன்று மிக சிறப்பாக இருந்தது.

    35 ரன்களுக்கு நன்றாகத்தான் ஆடினார் விராட் கோலி, தன்னம்பிக்கையுடன் ஆடிய அவர் தேவையில்லாமல் மிகவும் வைடாக சென்ற பந்தை விரட்டி எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தது நிச்சயம் அவரை பாதிக்கும், விடுதி அறையில் அவர் நிச்சயம் தான் ஆடிய ஷாட்டை நினைத்து வருந்தவே செய்வார்.”

    என போலாக் கூறினார். இன்று காலை 272/3 என்று களமிறங்கிய இந்திய அணி மீண்டும் கோலி போலவே தேவையில்லாத ஷாட்களை ஆடி இன்று ராகுல், ரகானே ஆட்டமிழக்க புஜாரா போலவே ஆட்டமிழந்தார் அதிரடி மன்னன் ரிஷப் பண்ட். ஷர்துல் தாக்கூரும் தேவையில்லாத ஷாட்டை ஆடி ஆட்டமிழக்க இந்திய அணி 55 ரன்களுக்கு மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களுக்கு சற்று முன் சுருண்டது.

    லுங்கி இங்கிடி, இவர்தான் கோலியை வீழ்த்தினார், இன்று மேலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சற்று முன் வரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா வீசிய லெந்த் பால் ஒன்று இடது கை வீரர், கேப்டன் எல்கருக்குக் குறுக்காகச் செல்ல எட்ஜ் ஆக பண்ட் கேட்ச் எடுத்தார் எல்கர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையும் படிங்க: கொரோனா: நெருக்கமான மருத்துவக் கண்காணிப்பில் சவுரவ் கங்குலி

    உணவு இடைவேளைக்குபு பிறகு மற்றொரு வீரர் கீகன் பீட்டர்சன் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஷமியின் இன்ஸ்விங்கரை சொதப்பலாக ஆடி இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். தற்போது மார்க்ரம் 13 ரன்களுடனும் ரசி வான் டெர் டியூசன் 1 ரன்னுடனும் ஆடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா 30/2.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa

    அடுத்த செய்தி