Home /News /sports /

BCCI : விராட் கோலி விளையாடுவது இப்போது வரை உறுதி - பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி தகவல்

BCCI : விராட் கோலி விளையாடுவது இப்போது வரை உறுதி - பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி தகவல்

விராட் கோலி

விராட் கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனக்கு விடுப்புத் தேவை, மகள் வாமிகாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடப் போவதாக விராட் கோலி பிசிசிஐ அமைப்பிடம் கேட்டதாக வெளியான செய்திகளை அடுத்து பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோலியிடமிருந்து அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை என்று மறுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனக்கு விடுப்புத் தேவை, மகள் வாமிகாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடப் போவதாக விராட் கோலி பிசிசிஐ அமைப்பிடம் கேட்டதாக வெளியான செய்திகளை அடுத்து பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோலியிடமிருந்து அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை என்று மறுத்துள்ளார்.

    தென் ஆப்பிரி்க்காவுக்கு வரும் 17ம் ேததி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

    மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது த்ரோ டவுனில் கையில் காயம் ஏற்பட்டு ரோகித் சர்மா விலகினார், ஆனால் அவருக்குத் தொடைப்பகுதியில் காயம் இருப்பதால் ஒருநாள் தொடருக்குள் தயாராவாரா என்பதும் சந்தேகமான நிலையில் திடீரென விராட் கோலி ஒருநாள் தொடரில் ஆடமாட்டார் என்ற செய்தி வெளியானது. ஆனால் இது தொடர்பாக விராட் கோலி தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை, அவர் ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லை.

    இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் தொடரிலிருந்து பிசிசிஐயிடம் அதிகாரபூர்வமாக விலக்குக் கேட்டுள்ளாரா என்பது குறித்து பிசிசிஐ அதிகாரியிடம் செய்தி நிறுவனம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலக்குக் கேட்டு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷாவிடம் விராட் கோலி சார்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான கோரிக்கையும் வரவில்லை.

    ஒருவேளை இதன்பின் ஏதாவது முடிவு எடுக்கப்பட்டாலோ அல்லது காயம் காரணமாக கோலி விளையாடமுடியாமல் போனாலோ என்பது வேறு விஷயம்.

    ஆனால் இன்றைய தேதியில் விராட் கோலியிடம் இருந்து முறைப்படி எந்தவிதமான கோரி்க்கையும் பிசிசிஐக்கு வரவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரி்ல் கோலி விளையாடுவது இன்றுவரை உறுதி.

    பயோ-பபுள் கட்டுப்பாடு இருப்பதால், அனைத்து வீரர்களின் குடும்பத்தாரும் தென் ஆப்பிரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல உள்ளனர். விராட் கோலியும் குடும்பத்துடன் செல்கிறார். ஒருவேளை டெஸ்ட் தொடர் முடிந்தபின் பயோ-பபுள் அழுத்தம் இருப்பதாக கோலி உணர்ந்தால், அவர் விலக்கு ெபறலாம். அதற்கு முறைப்படி பிசிசிஐ தலைவர், செயலாளரிடம் பேசி கோலி விலக்குப் பெறலாம்”எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க:டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் விலகுவதும் ஒருநாள் தொடரிலிருந்து கோலி விலகுவதும் சரியாகப் படவில்லையே- அசார் சந்தேகம்

    விராட் கோலி தனது மகள் வாமிகாவின் பிறந்தநாள் 2022, ஜனவரி 11ம் தேதி வருவதால் அன்று குடும்பத்துடன் செலவழிக்கவே ஒருநாள் தொடரிலிருந்து விலக்குக் கோரியுள்ளதாக செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால், அன்றைய தேதியில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பதால், விலக்குக் கேட்பாரா என்பது தெரியவில்லை. மேலும், ஒருநாள் தொடர் ஜனவரி 19ம் தேதிதான் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Virat Kohli

    அடுத்த செய்தி