Home /News /sports /

நான் இல்லாமல் இந்தியா ஜெயித்து விடுமா? - கோலி உட்கார்ந்ததன் பின்னணி கூச்சல்கள்

நான் இல்லாமல் இந்தியா ஜெயித்து விடுமா? - கோலி உட்கார்ந்ததன் பின்னணி கூச்சல்கள்

கோலி

கோலி

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள், உலகக் கோப்பை நேரத்தில் அணியைப் பாதிக்கும் என்று விராட் கோலியிடம் பிசிசிஐ நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டோம் என்று தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா விஷயத்தை போட்டு உடைத்ததன் மன உளைச்சலில்தான் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள், உலகக் கோப்பை நேரத்தில் அணியைப் பாதிக்கும் என்று விராட் கோலியிடம் பிசிசிஐ நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டோம் என்று தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா விஷயத்தை போட்டு உடைத்ததன் மன உளைச்சலில்தான் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் நான் இல்லாமல் ஜெயித்து விட முடியுமா பார்க்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாக சில வட்டாரங்கள் கூறினாலும், ஆஸ்திரேலியாவில் அவர் ஒரு டெஸ்ட்டுனனேயே போன போது நம்பிக்கையுடன் போனதுதான் நம் நினைவுக்கு வருகிறது, ரகானே ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றார். எனவே விராட் கோலி நாஅன் இல்லாமல் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற மனநிலையில் இருக்க முடியாது என்பதற்கு அந்த சம்பவமே உதாரணமாக திகழ்கிறது. ஆனால் ஒருசில ஊடக வட்டாரங்கள் இப்படி எழுதுகின்றன.

தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்குச் செல்லும் முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என முடிவைத் தெரிவித்தபோது, பிசிசிஐ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நல்ல முறையில் ஏற்றுக்கொண்டனர். வேண்டாம் ராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவில்லை. தயக்கமும் காட்டவில்லை” எனத் தெரிவித்தார்.

இதனால் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவு எடுத்த விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியது குறித்துக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா கோலியிடம் கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டோம் எனக் கூறியுள்ளதால் எந்த தரப்பிலிருந்தும் உண்மை மட்டும் வரவே வராது என்று தெரிகிறது.

கோலி உட்கார்ந்தது, கும்ப்ளே காலக்கட்டம், திராவிட் காலக்கட்டம்: ஒரு ஒப்பீடு

அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியில் காயமடைந்தார், அப்போது அனில் கும்ப்ளே காயத்துடன் ஆடக்கூடாது என்று கோலிக்கு தடை உத்தரவு பிறப்பித்தார், கோலி பயங்கர கடுப்பானார், அந்த டெஸ்ட் போட்டியில் ரகானே கேப்டன்சியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது அந்தப் போட்டியில்தான் குல்தீப் யாதவ்வை கோலியின் எதிர்ப்பையும் மீறி அனில் கும்ப்ளே அணியில் சேர்த்து அவரை ஒரு டெஸ்ட் பவுலராக உலகுக்கு அடையாளம் காட்டினார்.

அப்போது உண்மையான காயத்துடன் இருந்த கோலியை ஆடாதே என்று அவுட் ஆஃப் பார்மில் இருந்த கோலியை கும்ப்ளே காப்பாற்றினார்,  ஆனால் கும்ப்ளேயை கோலிக்குப் பிடிக்காமல் போனது. இப்போது ராகுல் திராவிட் அதே போல் பார்மில் இல்லாத கோலியை ஆடக்கூடிய காயத்தைக் காரணம் காட்டி பாதுகாக்கிறார். அனில் கும்ப்ளே பாதுகாத்த முறை கோலிக்குப் பிடிக்கவில்லை, இன்று பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கும் கோலி ராகுல் திராவிட் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த காலங்களில் இதே முதுகு வலியுடன் ஆடியுள்ளார் கோலி, இப்போது என்னவாம்? அதுதான் அதிகாரம் பிடுங்கப்பட்டு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக ஆனதால் கோபமும் வெறுப்பும் கொப்பளிக்க ‘நான் இல்லாமல் இந்திய அணி ஜெயித்து விடுமா?’ என்று பார்க்கிறேன் என்ற மனவாசகம் சொல்ல திராவிட் சொன்னதும் உட்கார்ந்ததாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவி சாஸ்திரி ஒரு நெகெட்டிவ் தாக்கமாக கோலியின் மீது தன் எதிர்மறை ஆக்ரோஷங்களையும் அதிகார இச்சையும் செலுத்தி அவரிடம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. இன்று மயக்கம் தெளிந்து ரியாலிட்டியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார் கோலி.

ஆனாலும் ஒருக்காலும் ஏன் கோலி ஏன் நீக்கப்பட்டார் என்ற உண்மை வெளிவரப்போவதில்லை, அது கோலி ஓய்வு பெற்ற பிறகு எழுதும் சுயசரிதைக்கான விஷயமாகி விடும். புத்தகம் நன்றாக விற்கும். மொத்தத்தில் ரசிகர்களை ஏமாளியாக்கி வருகின்றனர்.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, India vs South Africa

அடுத்த செய்தி