Home /News /sports /

இந்திய அணிக்கு நிம்மதி: தென் ஆப்பிரிக்காவின் ‘கொல வெறி’ ஃபாஸ்ட் பவுலர் விலகல்

இந்திய அணிக்கு நிம்மதி: தென் ஆப்பிரிக்காவின் ‘கொல வெறி’ ஃபாஸ்ட் பவுலர் விலகல்

தெ.ஆ. அணியில் முக்கிய பாஸ்ட் பவுலர் விலகல்

தெ.ஆ. அணியில் முக்கிய பாஸ்ட் பவுலர் விலகல்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்கும் நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அதிவேக பவுலர் ஐபிஎல் புகழ் ஆன்ரிச் நார்ட்யே 3 டெஸ்ட் போட்டிகள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்கும் நிலையில் தென் ஆப்பிரிக்காவின் அதிவேக பவுலர் ஐபிஎல் புகழ் ஆன்ரிச் நார்ட்யே 3 டெஸ்ட் போட்டிகள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    ஆன்ரிச் நார்ட்யே கடந்த 2018 தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடவில்லை. ஒரு விதத்தில் இந்தியாவுக்கு இது நல்லதுதான், இந்திய பேட்டர்களில் இருவர் பவுலர்களில் இருவரை நிச்சயம் அவர் பந்து வீச்ச்சில் காயப்படுத்தி விடுவார், அதிலிருந்து மீள்வது கடினமாகியிருக்கும். அதுவும் அவர் தென் ஆப்பிரிக்கா பிட்ச்களில் ஆட முடியாத ஒரு வேகப்பந்து வீச்சாளர்.

    ஆகவே ஆன்ரிச் நார்ட்யே காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு நிம்மதிப் பெருமூச்சே. இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்யேதான். 5 மேட்ச்களில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றியுள்ளார் இந்த ஆண்டில். அதில் ஒரு இன்னிங்சில் 5/56 என்று அசத்தியுள்ளார்.

    டெஸ்ட் தொடரிலிருந்து ஆன்ரிச் நார்ட்யே விலகல்


    இவருக்கான மாற்று வீரரே தேவையில்லை ஏனெனில் இவர் போக 7 மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். இதனையடுத்து இன்னொரு கொலவெறி வேகப்பந்து வீச்சாளர் வருகிறார் அவர் டுவேன் ஆலிவியர். இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியவர், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டுக்குச் செல்லும் கோல்பாக் டீலில் இவரும் போய் தற்போது திரும்பியுள்ளார்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ ஜேன்சன், பியூரென் ஹென்றிக்ஸ், கிளெண்டன் ஸ்டுர்மான், சிசந்தா மகடா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். இந்திய பேட்டர்கள் ஆன்ரிச் நார்ட்யேவை இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சந்தித்ததில்லை, சந்தித்த பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகளைக் கேட்டால் தெரியும் ஐபிஎல் தொடரில் பார்க்கும் பவுலர் அல்ல அவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் கொலவெறியுடன் வீசுவார், இது வங்கதேச பேட்ஸ்மென்கள் பேண்டேஜுடன் வந்திறங்கினாகளே அவர்களுக்குத் தெரியும்.

    தென் ஆப்பிரிக்கா அணி விவரம்:

    டீன் எல்கர், பவுமா, குவிண்டன் டி காக், கேகிசோ ரபாடா, ரசீ வான் டெர் டியூசன், பியூரன் ஹென்றிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, வியான் முல்டர், கீகன் பீட்டர்சன், சாரெல் எர்வீ, கைல் வெரீனி, மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், மார்க்ரம், லுங்கி இங்கிடி, டுவேன் ஆலிவியர், கிளெண்டன் ஸ்டர்மேன், பிரணலன் சுப்ரேயன் , சிசந்தா மகலா, ரியான் ரிக்கிள்டன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa 2019

    அடுத்த செய்தி