ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பேட்டிங்கில் தடுமாற்றம்; இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி

பேட்டிங்கில் தடுமாற்றம்; இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடும் இந்திய அணி முதல்போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதனையடுத்து, அதிக எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி தொடங்கியது.

டாஸ்வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ், இஷான் கிஷன் களமிறங்கினர். ரூத்ராஜ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, இஷான் கிஷன், ஸ்ரேயாஷ் ஐய்யர் இணை ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடியது. 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய கேப்டன் பன்ட், 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமா ஆடிய ஸ்ரேயாஸ் ஐய்யரும் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனையடுத்து, தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிம்பா பாவுமாவும், ரீஸா ஹென்ட்ரிக்ஸும் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ட்வைன் ப்ரிட்டோரியஸும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஸி வான் டெர் துஸென் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து, களமிறங்கிய ஹெயின்ரிச் க்ளாசென் அதிரடியாக ஆடினார்.

அதிரடியாக ஆடிய க்ளாசென் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 81 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதனையடுத்து, டேவிட் மில்லர் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா அணி 149 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

First published:

Tags: India vs South Africa