ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முன்னிலையில் இறங்கி ரன்களை அடித்தாலும் தோனிக்குப் பிறகு பினிஷர் ரோலை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப் போவதாக ராகுல் திராவிட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022 தொடரில் தினேஷ் கார்த்திக் அதிகபட்ச ஸ்ட்ரை ரேட்டுடன் நல்ல பினிஷர் என்ற தன் திறமையை நிரூபித்துள்ளார், ஆனால் மீண்டும் அவரை உட்கார வைக்கவே பிளான் போடப்படுவதாகத் தெரிகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 487 ரன்களை எடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. சராசரி 44.27. ஸ்ட்ரைக் ரேட் 131.26 தான் ஆனால் தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக் ரேட் 183.
இந்நிலையில் திராவிட் கூறும்போது, “ஹர்திக் பாண்டியா பேட் மற்றும் பந்துவீச்சில் ஆச்சரியகரமான ஒரு வீரர்.கடந்த காலத்தில் இந்தியாவுக்காக இதைப் பார்த்துள்ளோம். அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமாகத் திகழ்கிறார்.ஐபிஎல் தொடரிலும் சீரியஸான பார்மை காட்டினார் ஹர்திக் பாண்டியா. அதனால் இத்தகைய தரத்திலிருந்து ஒருவரை தேர்வு செய்வது மகிழ்ச்சிதான்.
பேட்டிங் ஆர்டர் என்னவென்று நான் கூறப்போவதில்லை. ஆனால் ஐபிஎல் உரிமையாளருக்காக ஒரு வீரர் பணியாற்றும் ரோலிலிருந்து இந்தியாவுக்காக ஆடும்போது மாற்றமிருக்கவே செய்யும். ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் அனைவருக்குமே இந்தியாவுக்கு ஆடும்போது ரோலில் மாற்றமிருக்கவே செய்யும். இந்திய அணிச்சேர்க்கையை பொறுத்தவரை அணியில் வீரர்களின் இடம் மாறும்.
ஹர்திக் பாண்டியா கேப்டன்சியைப் பார்த்தோம், ஆனால் அதனால் இந்திய அணியின் தலைமைக் குழுவில் அவருக்குப் பங்கிருக்கிறது என்று பொருளல்ல, இப்போதைக்கு அவர் பவுலிங் போட ஆரம்பித்தது நல்ல விஷயம். எனவே அவரிடமிருந்து சிறந்தவற்றை பெற முடியும் என்று நம்புகிறோம். ஒட்டுமொத்தமாக அவரிடமிருந்து என்ன பங்களிப்பை அறுவடை செய்வது என்பதில்தான் இருக்கிறது விஷயம்” என்கிறார் ராகுல் திராவிட்.
அதாவது அணியில் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யர், தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் கிடைத்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இருப்பது கடினம்.
ஏனெனில் இந்திய அணி இப்படி இருக்கலாம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), இஷான் கிஷன் அல்லது ருதுராஜ், ஸ்ரேயஸ் அய்யர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், செஹல்.
எனவே அக்சர் படேல், ஹர்திக் சொதப்பினால்தான் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.