விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஸ்பெஷல் வாழ்த்து!

விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் ஸ்பெஷல் வாழ்த்து!
விராட் கோலி (Image: BCCI)
  • News18
  • Last Updated: September 19, 2019, 9:12 AM IST
  • Share this:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி, முதலில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஹெண்ட்ரிக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் டி காக்-கும், பவுமா-வும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டி காக் அரை சதம் அடித்த நிலையில், நவ்தீப் சைனி வீசிய பந்தை அடித்தார். மிட்-ஆஃப் திசையிலிருந்து ஓடிவந்த விராட் கோலி, அதனை லாவகமாக பிடித்து டி காக்-கை ஆட்டமிழக்கச் செய்தார்.


சிறப்பாக ஆடிய பவுமா 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டேவிட் மில்லர் 18 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில், தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷிகர் தவானும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்து, தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். 40 ரன்களை எடுத்திருந்த ஷிகர் தவான் அடித்த பந்தை டேவிட் மில்லர் அற்புதமாக குதித்து பிடித்தார்.

பின்னர் வந்த ரிஷப் பந்த் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, விராட் கோலியும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.கடைசிவரை ஆட்டமிழக்காத விராட் கோலி 72 ரன்களைக் குவித்து, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். மேலும், 71 போட்டிகளில் 2 ஆயிரத்து 441 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச அளவில் 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. கடைசி 20 ஓவர் போட்டி, பெங்களூரு மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.இந்நிலையில், டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள விராட் கோலிக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also See...

First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading