Home /News /sports /

India vs South Africa| சிஷ்யன் விராட் கோலிக்கு பேட்டிங் பாடம் எடுத்த குரு ராகுல் திராவிட்

India vs South Africa| சிஷ்யன் விராட் கோலிக்கு பேட்டிங் பாடம் எடுத்த குரு ராகுல் திராவிட்

விராட் கோலி.

விராட் கோலி.

  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :
    தன் பேட்டிங் உத்தியில் திணறி வரும் விராட் கோலியின் பேட்டிங்கை நெறிவழிப்படுத்தும் முயற்சியில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தீவிரமாக இறங்கி உள்ளார். இதன் பலனை தென் ஆப்பிரிக்கா தொடரில் பார்க்கலாம்.

    26ம் தேதி பாகிசிங் டேயில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது, வேகப்பந்து வீச்சாக இருந்தாலும் ஸ்பின்னாக இருந்தாலும் விராட் கோலி ஒரே மாதிரி ஆட்டமிழந்து வருகிறார், அவரை சொல்லி வைத்து எடுக்கின்றனர். 3-4 அவுட்ஸ்விங் பிறகு ஒரு இன்ஸ்விங் என்றால் எல்.பி.ஆகி விடுகிறார், இல்லையெனில் 3-4 இன்ஸ்விங்கர் பிறகு ஒரு அவுட் ஸ்விங்கர் என்றால் எட்ஜ் செய்து விடுகிறார் விராட் கோலி.

    இத்தகைய ஒரு பேட்டர்ன் அவர் அவுட் ஆவதில் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஸ்விங்கிங் பிட்ச்களில் வேகப்பந்து பிட்ச்களில் எல்.பி.வாய்ப்பு குறைவுதான் ஏனெனில் பந்துகள் எழும்பி விடும், எல்.பி. கேட்க முடியாது, கேட்டாலும் பந்து எழும்பும் என்பதால் ஸ்டம்புகளுக்கு மேல் செல்லும் என்று நடுவர்கள் அவுர் தர மாட்டார்கள் எனவே இத்தகைய பிட்ச்களில் கிரீசுக்கு வெளியே நிற்க வேண்டிய அவசியம் இல்லை. கோலி அப்படித்தான் நிற்கிறார்.

    இதனால் பந்தை லேட்டாக ஆடும் ட்ரிக்கை விட்டு விடுகிறார். ஒரு பந்தை முன்னால் காலைப் போட்டு மட்டையை நீட்டுவதில் ஏகப்பட்ட ஆபத்துகள் உள்ளன, ஆனால் அதே பந்தை பின்னால் வந்து தாமதமாக எதிர்கொண்டால் ஒன்று அவுட் ஆகாமல் ஆடலாம் இல்லயெனில் பந்தை விட்டு விடலாம். ஷார்ட் பிட்ச் பந்துகளையும் ரன் எடுக்கலாம். ஆனால் கோலி இதனைச் செய்யாமல் ரொம்ப முன்னால் நின்று ஆடி ஆடாமல் விடவேண்டிய பந்துகளுக்கும் டிரைவ் ஆடப்போய் எட்ஜ் செய்கிறார்.

    வலைப்பயிற்சியில் வியர்வை சிந்தும் விராட் கோலி:



    2018 தொடரில் தென் ஆப்பிரிக்காவில் கோலி 286 ரன்களை 47 என்ற சராசரியில் எடுத்தார், செஞ்சூரியனில் அருமையான ஒரு சதத்தையும் எடுத்தார். ராகுல் திராவிட் பந்தை லேட் ஆக ஆடுபவர், அதே வேளையில் ஓவர் பிட்ச் ஆஃப் வாலி விழுந்தால் காலைப் போட்டு ட்ரைவ் ஆடி பந்துகளை 4 ரன்களுக்கு விரட்டுபவர். தனது பேட்டிங் கலைகளை சிஷ்யன் விராட் கோலிக்கு நிச்சயம் மாற்றுவார் ராகுல் திராவிட்.

    இதையும் படிங்க: ஷாஹீன் அஃப்ரீடியின் முதல் ஓவரிலேயே இந்தியா ஆடிப்போயிட்டாங்க, எழுந்திருக்க முடியல- வாசிம் அக்ரம்

    இந்நிலையில் விராட் கோலியின் உத்தியில் பெரிய மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ராகுல் திராவிடின் இன்புட் தான். வலைப்பயிற்சியில் கோலி கடுமையாக பிராக்டீஸ் செய்து வருகிறார். திங்களன்று பிசிசிஐ இதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa 2019, Rahul Dravid, Virat Kohli

    அடுத்த செய்தி