டெஸ்ட் போட்டிகளில் 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் 'கிங்' கோலி!

டெஸ்ட் போட்டிகளில் 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் 'கிங்' கோலி!
விராட் கோலி
  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நேற்று தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வ செய்தது. தொடங்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 108 ரன்கள் அடித்து அவட்டானார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் கோலி - ரஹானே பொறுமையுடன் விளையாடினர். கேப்டன் கோலி டெஸ்டில் 26வது சதத்தை பதிவு செய்தார். ரஹானே 59 ரன்கள் எடுத்திருந்த போது மஹாராஜ் பந்துவீச்சில் அவுட்டாகினார்.

ரஹானே அவுட்டானதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடி கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன் விராட் கோலி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading