Home /News /sports /

டெய்ல் எண்டர்களிடம் வீரத்தைக் காட்டும் பும்ரா- தடுக்க ஸ்டெய்ன் தரும் புதிய யோசனை

டெய்ல் எண்டர்களிடம் வீரத்தைக் காட்டும் பும்ரா- தடுக்க ஸ்டெய்ன் தரும் புதிய யோசனை

டேல் ஸ்டெய்ன்

டேல் ஸ்டெய்ன்

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஒவருக்கு 7 முதல் 8 பந்துகள் அல்லது சிலநேரங்களில் 9 பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பவுலர்கள் பேட் செய்யும் போது அவர்களைக் காக்க இது உதவும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பவுலர்களின் நோ-பால்களுக்கு ஃப்ரீ ஹிட் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க முன்னால் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் பரிந்துரை செய்துள்ளார்.

    டெய்ல் எண்டர்களுக்கு பவுன்சர்களை வீசி தன் வீரதீர பராக்கிரமங்களைக் காட்டும் பும்ரா போன்ற பவுலர்களை மனதில் கொண்டே டேல் ஸ்டெய்ன் இதனை தெரிவித்துள்ளார்.

    ஆம்! இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட் செய்ய இறங்கிய போது பும்ரா அவரிடம் தன் வீரதீர பராக்கிரமத்தைக் காட்டி பவுன்சர்களாக வீசி அவரை காயப்படுத்தும் ஒரு தீய நோக்கோடு வீசினார். அதிலும் வேண்டுமென்றே நோ-பால்களையும் வீசினார். கிரீசைத் தாண்டி வேண்டுமென்றே வீசி டெய்ல் எண்ட் பேட்டர்களை காயப்படுத்தும் தீய நோக்குடைய பும்ரா போன்ற பவுலர்களுக்கு நோ-பால் வீசினால் ஃப்ரீ ஹிட் என்ற அபராத முறையை கொண்டு வந்தால் சரியாகி விடும் என்கிறார் டேல் ஸ்டெய்ன்.

    அதே செயலை தென் ஆப்பிரிக்கத் தொடரில் இடது கை வீரர் யான்செனுக்கு எதிராகவும் பும்ரா செயல்படுத்தினார். இதைச் சுட்டிக்காட்டியே ேடல் ஸ்டெயின் நோ-பாலுக்கு ப்ரீ ஹிட் வழங்கிட வேண்டும். ப்ரீ ஹிட் வழங்கும்போது பேட்ஸ்மேன்கள் அடிக்கும்போது சிக்ஸர், பவுண்டரி செல்லும் அதனால் பாதிப்பு பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் என்பதால், யாரும் நோ-பால் வீச மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் டெய்லண்டர்கள் பேட்ஸ்மேனையும் பவுன்ஸரிலிருந்து காக்க முடியும் என்கிறார் டேல் ஸ்டெய்ன்.

    டேல் ஸ்டெயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட்டை அறிமுகப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஒவருக்கு 7 முதல் 8 பந்துகள் அல்லது சிலநேரங்களில் 9 பந்துகள் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பவுலர்கள் பேட் செய்யும் போது அவர்களைக் காக்க இது உதவும்.

     
     டெய்லண்டர்கள் பெரிய வேகப்பந்துவீச்சாளர்களின் மிரட்டல்விடுக்கும் பந்துவீச்சை கடைசி நேரத்தில் எதிர்கொள்வது சிரமம் அதிலிருந்து ப்ரீ ஹிட் காப்பாற்றும். இதுபற்றி விவாதிக்கலாம். டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது. பும்ரா “நன்றாகப்பந்துவீசி” 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ” எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dale steyn, India vs South Africa, Jasprit bumrah

    அடுத்த செய்தி